சிறுநீரகத்தை பாதிக்கும்  5 நோய்கள்..

சிறுநீரகத்தை பாதிக்கும்  5 நோய்கள்..

சிறுநீரக கற்கள்

நம் ரத்தத்தில் உள்ள மினரல்கள் படிமனாகி கற்களாக உருவாகிறது. இது மிகவும் வலியை ஏற்படுத்துவதோடு சிறுநீர் கழிக்கும் போது ரத்தமும் சேர்ந்து வரும். ஆனால் மற்ற சிறுநீரக நோய்களை ஒப்பிடும் போது இது ஒன்றும் அவ்வளவு ஆபத்தானதில்லை.

1

பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்

சிறுநீரகத்தில் பல நீர்க்கட்டிகள் உருவாகும் போது இந்நோய் ஏற்படுகிறது. வழக்கமான சிறுநீரக நீர்க்கட்டிகளை விட இது  வித்தியாசமாகவும்  பெரிதாகவும் இருக்கும். இது நமது சிறுநீரக செயல்பாட்டை பாதித்து சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

2

குளோமெருலோனெப்ரிடிஸ்

சில தொற்றின் காரணமாக நமது சிறுநீரகத்தில் உள்ள சிறிய ரத்த குழாய்களான குளோமெருலியில் வீக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக குளோமெருலோனெப்ரிடிஸ் நோய் நம் சிறுநீரகத்தை தாக்குகிறது.

3

சிறுநீர் பாதை நோய்த்தொற்று

 சிறுநீரகப்பையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றால் இந்நோய் வருகிறது. இதை எளிதில் குணப்படுத்தலாம். ஆனால்முறையான சிகிச்சையும் எடுக்காமல் இருந்தால் சிறுநீரகத்தில் மோசமான பிரச்சனைகள் ஏற்படும். சில சமயங்களில் சிறுநீரகம் செயல்படாமல் போகக்கூட வாய்ப்புண்டு.

4

நாள்பட்ட தீராத சிறுநீரக நோய்

உயர் ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோய் காரணமாக இது ஏற்படுகிறது.நோய்களுமே சிறுநீரகத்தில் உள்ள ரத்தகுழாயை பாதித்து, ரத்த சுத்திகரிப்பை தடுக்கிறது. இதனால் நாளடைவில் நமது சிறுநீரகத்தின் செயல்பாடு மோசமடைகிறது.

5

மூளை மற்றும் நரம்புகளை பலப்படுத்தும் வைட்டமின் பி12 நிறைந்த 7 உணவுகள்.!