முருங்கை பூக்கள், முருங்கைக்காய், முருங்கை இலை என முருங்கை மரத்தின் பகுதிகள் நமக்கு பல்வேறு நன்மைகளை அள்ளி தருகின்றன
தென்னிந்தியாவில் மட்டுமல்ல நாட்டின் கிழக்குப் பகுதியிலும் கூட முருங்கை ஒரு பிரபலமான சமையல் பொருளாக இருந்து வருகிறது
இதில் ஜிங்க், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, மெக்னீசியம், பி2, பி3, பி-6, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் (வைட்டமின் சி), இரும்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன
பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் முருங்கையை உணவில் சேர்க்க சில வழிகள் உள்ளன. அவை அடுத்தடுத்த ஸ்லைடில்...
சீரகம், ஓமம், எள் உள்ளிட்ட உங்களுக்குப் பிடித்த அனைத்து மசாலாப் பொருட்களையும் முருங்கை இலைகளுடன் கலந்து மாவுடன் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான முருங்கை வடை ரெடி
கசூரி மேத்தி, மாவு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் முருங்கை கீரையை சேர்த்து சுவையான மற்றும் ஆரோக்கியமான சப்பாத்தி செய்து சாப்பிடலாம்
இலைகளின் சாற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் முருங்கை சூப்பானது முருங்கை இலை மற்றும் பருப்புகளை மசாலாப் பொருட்களுடன் வேகவைத்து சுவையாக தயாரிக்கப்படுகிகிறது
பாரம்பரிய தென்னிந்திய மசாலா கலவை மற்றும் முருங்கைக்காய்களின் ஆழமான சுவையுடன் தயாரிக்கப்படும் இந்த சாம்பார் செய்முறை செரிமானத்திற்கு சிறந்தது
சூடான எண்ணெயில் ஆழமாக வறுத்த பூண்டு, மிளகாய் மற்றும் கடலை மாவுடன் முருங்கைப் பூவை சேர்த்து பொரித்து எடுத்தாள் முருங்கைப் பூ வடை ரெடி