ஆசியா முழுவதும் பல கலாச்சாரங்களில் சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடுவது பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையெல்லாம் தாண்டி பல விதமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது.
சாப்பிட்ட பின் வெற்றிலை போடுவதால் எவ்வாறு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
செரிமானத்திற்கு வெற்றிலையில் செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டும் கலவைகள் உள்ளன. அதனால் இது செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாது சாப்பிட்ட பின் ஏற்படும் உப்புசத்தை குறைக்கிறது.
சுவாச புத்துணர்ச்சிக்கு சாப்பிட்ட பின் வெற்றிலையை மெல்லுவது இயற்கையான சுவாச புத்துணர்ச்சிக்கு உதவுகிறது. அதில் அடங்கியிருக்கும் நறுமண எண்ணெய் துர்நாற்றத்தை எதிர்த்து போராட உதவுவதோடு எப்போதும் சுத்தமாகவும் நறுமணம் மிக்கதாக வைக்க உதவுகிறது.
ஒட்டுமொத்த வாய் சுகாதாரத்திற்கு வெற்றிலையின் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகிறது. பல் சொத்தை மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து காக்கிறது. ஈறுகளை வலுப்படுத்தி ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க வெற்றிலை இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் உணவுக்கு பிறகு வெற்றிலையை மெல்வது சாப்பிட்ட பின் அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவுகளை நிர்வகிக்க உதவுகிறது.
மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது வெற்றிலையில் உள்ள சேர்மங்கள் மெட்டபாலிசத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கலோரிகளை எரித்து உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
அளவாக சாப்பிடுங்கள் வெற்றிலையில் பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், அதை அளவோடு உட்கொள்வது அவசியம். அதிகப்படியான நுகர்வு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே வெற்றிலையை சிறிய அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
betel-2024-10-44d2215e65a4ab6d66a4114aab4db1dd
betel-2024-10-44d2215e65a4ab6d66a4114aab4db1dd
இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும். News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிவி சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!