நெய் காஃபியின் 5 நன்மைகள்!

நெய் காஃபி ஆங்கிலத்தில் “Ghee coffee” என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இதை தயாரிப்பது மிக சுலபம். பிளாக் காஃபியில் நெய் சேர்த்தால் அதுதான் “கீ காஃபி”.

உடல் எடையைக் குறைக்கும் பிரபலமான இந்த பானத்தின் சில அற்புதமான நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

நெய்யுடன் காஃபினை இணைப்பது உங்கள் ஆற்றல் நிலைகளைத் தக்கவைத்து உற்சாகமாக இருக்க உதவுகிறது.

உற்சாகமாக வைத்திருக்கும்

நெய் காபி உங்கள் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. நெய்யில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளதால் நம் மூளையை எப்போதும் அலெர்டாக வைக்க உதவுகிறது.

அலெர்டாக வைத்திருக்கும்

நெய் காபி நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும் உணர்வை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்

நெய்யில் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால்,  இவை செரிமான செயல்முறையைத் தூண்டவும் மேம்படுத்தவும் உதவுகின்றது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது

நெய்யில் வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ நிறைந்துள்ளது, இது உங்கள் உடலை பல நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உதவுகிறது. Caffeine, cafestol, kahweol மற்றும் chlorogenic acid நிறைந்திருப்பதால், இந்த ‘நெய் காஃபி’நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.

நோயெதிர்ப்பு அமைப்புக்கு சிறந்தது

next

நெல்லிக்காயின் 8 சிறப்பான நன்மைகள்!!