யூரிக் ஆசிட் அளவை சட்டென்று குறைக்கும் 5 இலைகள்.!

உடலில் புரதச் சிதைவு காரணமாக யூரிக் அமிலம் உருவாகத் தொடங்கும் போது ​​கீல்வாதம் நோய் உண்டாகிறது

இந்த நோயில் மூட்டுகளில் கடுமையான வலி உண்டாகும். ஏனெனில் மூட்டுகளின் குருத்தெலும்புகள் தேய்மானமடைமதே இந்த வலிக்கு காரணம்

பொதுவாக யூரிக் அமிலம் சிறுநீரகங்கள் மூலம் சிறுநீர் வழியாக வெளியேறும். உடல் அதிக பியூரினை உருவாக்கத் தொடங்கும்போது ​​சிறுநீரகங்களால் அதை வெளியேற்ற முடியாது

பிறகு, இந்த அதிகப்படியான யூரிக் அமிலம் உடலின் மூட்டுகளின் குருத்தெலும்புகளில் குவியத் தொடங்குகிறது. பின் இது வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மூட்டு வலி ஏற்படுகிறது

ஒரு சாதாரண நபருக்கு யூரிக் அமிலம் ஒரு டெசிலிட்டருக்கு 3.5 முதல் 7.2 மில்லிகிராம் வரம்பில் இருக்க வேண்டும். இந்த அளவை தாண்டினால் விவரிக்க முடியாத மூட்டு வலியை அனுபவிக்கக்கூடும்

எனவே உங்கள் உடலில் யூரிக் அமிலங்களின் அளவை இயற்கையான முறையில் குறைக்க வேண்டுமெனில் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் உள்ள உணவுகளை சாப்பிட்டால் கட்டுக்குள் வைத்திருக்கலாம்

புதினா இலைகள்

போதுமான அளவு இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ, ஃபோலேட் உள்ள புதினா இலைகள் அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டது. புதினா இலைகளை சாப்பிடுவதால் சிறுநீரில் உள்ள பியூரின்கள் வெளியேறும் மற்றும் நச்சு நீக்குகிறது

1

More Stories.

யூரிக் ஆசிட் அளவை அதிகரிக்கும் உணவுகள்...

கால்சியம் சத்து குறைபாட்டை போக்க உதவும் உணவுகள்...

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் வெஜிடபிள் ஜூஸ்.!

கொத்தமல்லி இலைகள்

ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ள கொத்தமல்லி இலைகளில் கால்சியம், பொட்டாசியம், தியாமின், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற பல சத்துக்கள் உள்ளன. கொத்தமல்லி இரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் அளவையும் யூரிக் அமிலத்தையும் குறைக்கிறது

2

பிரிஞ்சி இலை

பல மருத்துவ குணங்கள் நிறைந்த பிரிஞ்சி இலை அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டது. பிரிஞ்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்த பிறகு அதன் தண்ணீரை குடிக்கலாம். இதனால் மூட்டு வலி குறையும்

3

வெற்றிலை

வெற்றிலையை மென்று சாப்பிடும் போது சிறுநீர் மூலம் யூரிக் அமிலத்தை வெளியேற்றுகிறது. நாள் முழுவதும் மூட்டு வலி பிரச்சனை வராமல் இருக்க அதிகாலையில் வெற்றிலையை மென்று சாப்பிடலாம்

4

கறிவேப்பிலை

கறிவேப்பிலை யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதில் நன்கு வேலை செய்யும். கறிவேப்பிலையை உட்கொள்வதால் இரத்தத்தில் தேங்கிய யூரிக் அமிலம் சிறுநீர் மூலம் வெளியேறும்

5

உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்

இந்த 9 காய்கறிகளும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.!