எனவே அடுத்தடுத்த ஸ்லைடில் குறிப்பிட்டுள்ள 5 எளிய உதவிக்குறிப்புகள் மூலம் குக்கரில் இருந்து தண்ணீர் வெளிவருவது மட்டுமின்றி கேஸ் ஸ்டவ்வையும் மிகவும் சுத்தமாக வைத்திருக்க முடியும்
குக்கர் மூடியின் ரப்பர் தளர்வானால் கூட குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறும். ரப்பர் சீக்கிரம் தளர்வாவதை தவிர்க்க சமைத்த பிறகு குளிர்ந்த நீரில் ரப்பரைப் போட்டால், அது நீண்ட காலம் நீடிக்கும். சிலர் குக்கர் ரப்பர்களை ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைப்பார்கள்
1
பல நேரங்களில் குக்கரில் உள்ள விசிலில் உணவு சிக்கிக் கொள்ளும். விசில் அழுக்காக இருந்தால், நீராவி சரியாக செல்ல முடியாது. எனவே குக்கரின் விசிலை முழுவதும் திறந்து பார்த்து அடைப்புகளை வெளியேற்ற வேண்டும்
2
குக்கரில் இருந்து தண்ணீர் வராமல் இருக்க நீங்கள் காய்கறி, பருப்பு அல்லது அரிசி சேர்க்கிறீர்கள் எனில் அதில் ஒரு சொட்டு எண்ணெய் விடுங்கள். அதோடு குக்கரின் மூடியைச் சுற்றி எண்ணெய் தடவவும். இது குக்கரில் உள்ள தண்ணீர் வெளியேற அனுமதிக்காது
3
குளிர்ந்த நீர் ஊற்றி சமைப்பதன் மூலம் குக்கரில் இருந்து தண்ணீர் வருவதைத் தடுக்கலாம். அப்படி ஒருவேளைகுக்கரில் இருந்து தண்ணீர் வந்தால் மூடியைத் திறந்து குளிர்ந்த நீரில் கழுவி மீண்டும் மூடினால் தண்ணீர் வராது
4
குக்கரில் அதிக தண்ணீர் ஊற்றினால் அல்லது குக்கரை அதிக தீயில் வைத்தால் தண்ணீர் கசிவு ஏற்படும். எனவே குக்கரில் உணவு சமைக்கும் போது தண்ணீரின் அளவு சரியாக இருக்க வேண்டும். மிதமான தீயில் சமைத்தால் குக்கரில் உள்ள தண்ணீர் வெளியே வராது
5