மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை
அந்த அடிப்படையில் உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக மருத்துவத்தில் செவ்வாழைப் பழமும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினால் மிகையாகாது
செவ்வாழைப்பழத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்திருந்தாலும், அதிகமாக சாப்பிடுவது உடலில் பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்என்று உங்களுக்கு தெரியுமா.?
அதிகமாக செவ்வாழை சாப்பிட்டால் உடலில் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...
இதிலுள்ள அதிக பொட்டாசியம் உள்ளடக்கம் ஹைபர்கேலீமியா பாதிப்புக்கு வழிவகுத்து சீரற்ற இதயத் துடிப்பு, படபடப்பு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம்
1
இதிலுள்ள இயற்கை சர்க்கரை வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு உதவி பிளேக் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். இதனால் பல் சிதைவு உட்பட வாய் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்
2
செவ்வாழையை அதிகமாக சாப்பிடுவது வாயு, வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்
3
மஞ்சள் வாழைப்பழத்துடன் ஒப்பிடுகையில் இதில் இயற்கையாவே சர்க்கரை உள்ளடக்கம் அதிகம். எனவே, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க விரும்புவோர் அடிக்கடி இதை சாப்பிடுவதை தவிர்க்கவும்
4
இதன் அதிக சர்க்கரை உள்ளடக்கம் உடல் எடை அதிகரிப்பில் தாக்கத்தை உண்டாக்கலாம். இதை தொடர்ச்சியாக உட்கொள்ளும் போது கலோரி நுகர்வு அதிகரிப்பால் உடல் எடை அதிகரிக்கலாம்
5
சிலருக்கு செவ்வாழை சாப்பிடுவது ஒவ்வாமையை உண்டாக்கலாம். இதை சாப்பிட்டவுடன் லேசான அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றை உணர்ந்தால் உடனே மருத்துவரை பார்க்கவும்
6
நீங்கள் ஏன் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்.!