மேற்கு வங்க மாநிலம் சாந்திபூரை சேர்ந்தவர் சஞ்சித் கோஷ். இவரும் இவரது மனைவியும் நாடியாவில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த தம்பதிக்கு மலையேற்றம் என்றால் அலாதி பிரியம். இவர்கள் பல மலையேற்றங்களில் பங்கேற்றுள்ளனர்.
இந்த தம்பதிக்கு மேக்மா என்ற பெண் குழந்தை பிறந்தாள். இவளுக்கும் ஐந்து வயதிலிருந்தே தன் பெற்றோருடன் மலை ஏற வரிசையில் நின்றாள்.
மேக்மா இதற்கு முன்னர் 3500 மீ. உயரமுள்ள ஒரு மலை சிகரத்தை 5 வயதிலேயே ஏறியுள்ளார். தற்போது 55 கி மீ நடந்து எவரெஸ்ட் மலையை அடைந்தார்.
பாதை சவால் நிறைந்ததாக இருந்தாலும் தடைகளை கடந்து இந்த சிறுமி 9 வது நாளிலேயே எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்தார்.
சிறுமியின் இந்த சாதனை நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. நாடெங்கிலும் இருந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.