விருதுநகருக்கு ட்ரிப் போறீங்களா? இதோ குதூகலிக்க அசத்தலான 7 டூரிஸ்ட் ஸ்பாட்.!

தமிழகம் போற்றும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த வீடு விருதுநகரின் மையப்பகுதியில் தான் உள்ளது. நுழைவு கட்டணம் கூட கிடையாது

காமராஜர் நினைவு இல்லம்

சதுரகிரி மலை

விருதுநகரிலிருந்து வத்திரயிருப்பு வரும் வழியில் வந்தால் தாணிப்பாறை எனும் ஊரில் இயற்கை எழில்மிக்க சதுரகிரி மலையை அடையலாம். மேலே இருக்கிற சுந்தர மகாலிங்கம் கோயில் ஓர் மிகச்சிறந்த ஆன்மீக தளம்

பிளவக்கல் அணை

விருதுநகரில் இருந்து சரியாக 45 கிலோமீட்டர் தொலைவில் வத்திராயிருப்பு அருகில் உள்ள இந்த அணை தென்றல் தவழும் சுற்றுலா தளம். விருதுநகர் மாவட்டத்தின் குளுமை பிரதேசம் என்றால் அது பிளவக்கல் அணை தான். மொபைல் சிக்னல் கூட கிடைக்காத இந்த இடத்திற்கு தினசரி காலை 9 மணிக்கு விருதுநகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து உள்ளது

ஆண்டாள் கோவில்

வத்திராயிருப்பில் இருந்து பஸ் பிடித்து ஶ்ரீவில்லிபுத்தூர் வந்தால் நாம் அடைவது ஆண்டாள் கோவில்‌. கோதை அவதரித்த ஊரும் கோவிந்தன் வாழும் ஊர் என்பதாலே இந்த கோவில் மிகவும் பிரபலம். இந்த கோவில் கோபுரம் தான் தமிழக அரசின் சின்னத்தில் உள்ள முத்திரை கோபுரம்

செண்பக தோப்பு

ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து உள்ளே 10 கி.மீ தொலைவில் உள்ளது இந்த பகுதி. அடர் வனம், நீரோடை, அருவி என இயற்கை சார்ந்த அனுபவம் மட்டுமல்ல பேச்சியம்மன் கோயில் மற்றும் காட்டழகர் கோவில் என இரண்டு கோவிலிலும் இருப்பதால் ஆன்மீக அனுபவத்தையும் பெறலாம்

அய்யனார் கோவில் அருவி

ராஜபாளையம் அருகில் உள்ள இந்த அருவிக்கு செல்ல வனத்துறை அனுமதி பெற வேண்டும். வனத்துறையினர் மூலம் வாகனத்தில் சென்று இங்குள்ள நீரோடை மற்றும் அருவியை பார்த்து ரசித்து வரலாம். இதுவும் செண்பக தோப்பு போன்று இயற்கை எழில் சூழ்ந்த இடம்

இது போக ஆன்மீகத்திற்கென இருக்கன்குடி மாரியம்மன் கோவில், தென் திருப்பதி எனப்படும் ஶ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை, கோபால் சாமி மலை, திருச்சுழி ரமண மகரிஷி இல்லம் என பல இடங்கள் உள்ளன

கோவையில் வந்தாச்சு சர்வதேச விளையாட்டு மைதானம்.!