கேல் ஒரு பச்சை இலைக் காய்கறியாகும். இதில் வைட்டமின் கே, சி மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் செரிமானத்தை மேம்படுத்தி நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகின்றது.
கேல் ஜூஸ்
பசலைக் கீரையில் இரும்பு, மெக்னீசியம், ஃபோலேட் என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறைந்த கலோரி, ஆனால் அதிக வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் ஏராளமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புவோர்க்கு சிறந்தது.
பசலைக் கீரை ஜூஸ்
குறைவான கலோரியைக் கொண்ட வெள்ளரிக்காய், சாலட்டுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் கே, பி மற்றும் சிலிக்கா போன்ற சத்துக்கள் நிறம்பியுள்ளது. வெள்ளரிக்காய் ஜூஸ் சிறந்த நீரேற்றத்தை வழங்குவது மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.
வெள்ளரிக்காய் ஜூஸ்
எலுமிச்சை சாறு உடலில் நச்சுக்களை நீக்க உதவுகிறது. மேலும் வைட்டமின் சி, ஆன்ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளதால் நொயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி செரிமானத்திற்கு உதவுகிறது.
எலுமிச்சை ஜூஸ்
ஆப்பிள் நார்ச்சத்து நிறைந்தது மட்டுமல்லாமல் வைட்டமின் சி, நிறைந்துள்ளதால் இரத்ததில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.
ஆப்பிள் ஜூஸ்
செலரி ஜூஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து கொண்டிருப்பதால் எடை இழப்பிற்கு சிறந்தது.
செலரி ஜூஸ்
குறைந்த கலோரி மற்றும் அதிக ஊட்டச்சத்து நிறைந்த பீட்ரூட் ஜூஸ், இரத்த நாளங்களின் விரிவாக்கத்தை ஊக்குவிக்கிறது.
பீட்ரூட் ஜூஸ்
இதய ஆரோக்கியத்திற்கு உகந்த 5 சமையல் எண்ணெய்கள்!