நீங்கள் புறக்கணிக்கக்கூடாத புற்றுநோயின்  7 ஆரம்ப அறிகுறிகள்.!

மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் விந்துப்பை புற்று நோய் ஆகியவை பெரும்பாலான நபர்களை தாக்கக்கூடிய புற்றுநோய் வகைகளாக உள்ளன

புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய தடையாக இருப்பது நோய் கண்டறிதல் ஆகும். புற்றுநோய் செல்கள் இருப்பது தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான சிகிச்சையில் தாமதம் ஏற்படுகிறது

இதன் காரணமாக சிகிச்சைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சியை புற்றுநோய் செல்கள் அடைந்து விடுகின்றன. ஆகவே புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும்

எனவே பெண்கள் மற்றும் ஆண்களில் பெரும்பாலும் அலட்சியமாக கருதப்படும் ஒரு சில புற்றுநோய் அறிகுறிகளை இங்கே தெரிந்து கொள்வோம்

புற்றுநோயானது ஒரு நபரை மிகவும் வலுவிழக்க செய்து, ஆற்றலை உறிஞ்சி விடுகிறது. இந்த சோர்வானது நாளுக்கு நாள் அதிகரிக்கும்

சோர்வு

1

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சோர்வானது வலி, குமட்டல், வாந்தி அல்லது மனச்சோர்வு போன்றவற்றையும் கூட ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது

சோர்வு

உடல் எடை குறைவது புற்றுநோய்க்கான முதல் அறிகுறி ஆகும். காரணமின்றி உங்கள் உடல் எடை குறையும் பொழுது, கட்டாயமாக ஒரு மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

உடல் எடை குறைதல்

2

லூகேமியா என்ற ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சருமம் சார்ந்த பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் உடல் முழுவதும் தடிப்புகள் காணப்படும்.

உடலில் தடிப்புகள் தோன்றுதல்

3

கண்களை யாரோ குத்திவிட்டது போன்ற கடுமையான வலி தோன்றுவது, கண்களில் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கான முக்கியமான ஒரு ஆரம்ப அறிகுறி ஆகும். 

கண்களில் வலி

4

ஆரம்பத்தில் லேசாக இருந்த தலைவலி படிப்படியாக அதிகரித்து தொடர்ந்து வரும் எனில் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இது பிரைன் ட்யூமரின் ஆரம்ப அறிகுறியாகும்

அடிக்கடி தலைவலி

5

வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான ரத்த ஓட்டத்துடன் கூடிய, உங்களால் தாங்கிக் கொள்ள முடியாத வலியை அனுபவித்தீர்களானால் இது எண்டோமெட்ரியல் கேன்சருக்கான அறிகுறியாக இருக்கலாம் 

வலியுடன் கூடிய மாதவிடாய்

6

முலைக்காம்பு அல்லது மார்பகத்தில் ஏதேனும் மாற்றங்கள் தோன்றுமாயின் உடனடியாக அதனை மருத்துவரிடம் தெரிவித்து தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம். 

மார்பகத்தில் மாற்றங்கள்

7

முலைக்காம்புகள் வடிவத்தில் மாற்றம், உள்நோக்கி அல்லது பக்கவாட்டில் திரும்பியவாறு காணப்படுதல் போன்றவை மார்பக புற்றுநோய் காண ஒரு சில அறிகுறிகள் ஆகும்

மார்பகத்தில் மாற்றங்கள்

பிறப்புறுப்பில் வீக்கம், உணவை விழுங்குவதில் சிரமம், செரிமான பிரச்சனைகள், சுவாசிக்க சிரமப்படுதல், வயிற்று உப்புசம், மலம் கழிப்பதில் மாற்றங்கள், சிறுநீர் கழிக்கும் போது வலி, காய்ச்சல் & நகங்களில் மாற்றங்கள்

பிற அறிகுறிகள்

தவிர்க்க வேண்டிய 13 ஆபத்தான உணவு சேர்க்கைகள்.!

Arrow