UTIஐ தடுப்பதற்கான 7 எளிய குறிப்புகள்!

Urinary Tract Infection(UTI)- ஆனது சிறுநீரகங்கள், சிறுநீரகக்குழாய், சிறுநீர்ப்பை என சிறுநீர் மண்டலத்தின் எந்தப் பகுதியிலும் இந்த சிறுநீர் பாதை தொற்றானது ஏற்படலாம்.

ஏனெனில் சிறுநீர் பாதை தொற்று வராமல் இருக்க வேண்டுமானால் நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.

சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்தால் நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்த வேண்டாம். ஏனெனில் இது பாக்டீரியா வளர்ச்சியின் அபாயத்தை அதிகரிக்கும்.

சிறுநீரை கட்டுப்படுத்தாதீர்

அவ்வபோது சரியான இடைவேளையில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடலுக்கு போதுமான தண்ணீர் அருந்தி நீரேற்றத்துடன் இருப்பது அவசியம். இது தொற்று நோய்கள் வராமல் தடுக்க உதவும்.

அதிக தண்ணீர் அருந்துங்கள்

எப்போதும் தனிப்பட்ட சுகாதாரத்தை பின்பற்றுவதில் மிகவும் கவனமாக இருங்கள். சுத்தமான உள்ளாடைகளை அணியுங்கள், மேலும் அந்தரங்க பகுதிகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது அவசியம்.

சரியான சுகாதாரத்தை பின்பற்றவும்

லேஸ் போன்ற ஃபேன்ஸியான டிசைனர் உள்ளாடைகள் அணிவதை தவிர்த்து மென்மையான துணியிலான உள்ளடைகளை அணிவது அவசியம். இல்லையெனில் அரிப்பு மற்றும் தொற்றுக்கு வழிவகுக்கும்.

பொருத்தமான உள்ளாடையை அணியவும்

எலுமிச்சை நீர் போன்ற பானங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்கள் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் சிறுநீர் கற்கள் போன்றவற்றை தடுக்க உதவுகிறது.

வைட்டமின் சி உட்கொள்ளுங்கள்

சில கருத்தடை மருந்துகளை உட்கொள்வதால்  UTI வரும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். எந்த விதமான மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு முன் முறையாக மருத்துவரை அணுகுங்கள்.

சரியான கருத்தடை முறைகள்

வாசனை நிறைந்த சரும தயாரிப்பு பொருட்களை தவிர்த்திடுங்கள். இந்த தயாரிப்புகள் ரசாயனங்களால் ஆனது. இது சிறுநீர் கழிக்கும் பகுதியில் தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல் இயற்கையான PH அளவின் சமநிலையின்மையை உருவாக்குகிறது.

வாசனை நிறைந்த தயாரிப்புகள் வேண்டாம்

next

இதய ஆரோக்கியத்திற்கு உகந்த 5 சமையல் எண்ணெய்கள்!