நல்ல தூக்கத்திற்கு இரவு உணவில் தவிர்க்க வேண்டிய 7 உணவுகள்.!

ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமாக கருதப்படுகிறதோ அதேபோல் ஆரோக்கியமான இரவு உணவை சாப்பிடுவதும் ஒரு முக்கிய அம்சமாகும்

நம் உடல் பல்வேறு வகையான உணவுகளுக்கு வித்தியாசமாக செயல்படுகிறது, இது உங்கள் செரிமானம், உடல் எடை மற்றும் தூக்கத்தை பாதிக்கலாம்.

மேலும், இரவில் உணவு செரிக்க நேரம் எடுக்கும். எனவே, உங்கள் இரவு உணவில் நீங்கள் எதைச் சேர்க்கிறீர்கள் என்பது முக்கியமானது

இரவில் தூக்கத்தை கெடுக்கும் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் 7 உணவுகளை பற்றி அடுத்தடுத்த ஸ்லைடில் காணலாம்

இரவு உணவின் போது, அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் மற்றும் உடலில் கொழுப்பு படிவுகளுக்கு பங்களிக்கிறது.

கொழுப்பு உணவுகள்

1

இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும் மற்றும் சாக்லேட்டுகளில் குறைந்த அளவு காஃபின் இருப்பதால் தூக்கம் தொந்தரவு செய்யும்.

இனிப்புகள்

2

இரவில் அதிக கிளைசெமிக் உள்ள கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டாம். அவை இரத்த ஓட்டத்தில் வேகமாக உறிஞ்சப்படும். மேலும், செரிமான பிரச்சனைகளை உருவாக்கும்

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்

3

கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால் வறுத்த உணவுப் பொருட்கள் உங்கள் செரிமான செயல்முறையை மெதுவாக்கும் மற்றும் உங்கள் தூக்கத்தையும் பாதிக்கும். மேலும், உடலில் அமில வீக்கத்திற்கு வழிவகுக்கும்

வறுத்த உணவுகள்

4

இரவில் உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை & இன்சுலின் அளவு அதிகமாக இருக்கும். இந்த உணவுகள் சர்க்கரையாக வளர்சிதை மாற்றமடைந்து, ஆற்றலுக்காக எரிக்கப்படுகின்றன. எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

மாவுச்சத்துள்ள உணவுகள்

5

இரவு உணவிற்கு புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மெதுவாக செரிமானத்தை ஏற்படுத்தும் & வீக்கம் போன்ற பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்கலாம். சில நேரங்களில் வாயு பிரச்சனையை ஏற்படுத்தும்

அதிக புரத உணவுகள்

6

இரவில் காரமான உணவுகளை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல், வாயில் அமில சுவை, வயிற்றில் அஜீரண வலி போன்றவற்றை ஏற்படுத்தும். இது இரவில் உங்கள் தூக்கத்தைத் தொந்தரவு செய்யலாம்.

காரமான உணவுகள்

7

பாதாமை ஏன் ஊறவைத்து  சாப்பிட  வேண்டும்.?  அதன் 6 நன்மைகள்.!

Arrow