வெந்தயத்தில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி தெரியுமா.?

வெந்தயத்தில் ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், காப்பர், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து , மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6, சி மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன

வெந்தயத்தில் கரையத்தக்க நார்ச்சத்து அதிகமாக உள்ளது மற்றும் வெந்தயம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவையும் மேம்படுத்த உதவுகிறது

கார்போஹைட்ரேட்டின் செரிமானம் (டைஜஷன்) மற்றும் உறிஞ்சுதலை (அப்ஷார்ப்ஷன்) குறைப்பதன் மூலம், வெந்தயம் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது

செரிமானத்தை மேம்படுத்தும்

வெந்தயத்தை உட்கொள்வதன் மூலம் உடலின் செரிமான அமைப்பு மேம்படும். இது பசியின்மை பிரச்சனையை குணப்படுத்தி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது

01

சர்க்கரை அளவை குறைக்கும்

வெந்தயத்தை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. மேலும் வெந்தயம் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் கூட உதவி புரிகிறது

02

முடி உதிர்வை குறைக்கும்

முடி உதிர்தல், முடி வலுவிழத்தல் மற்றும் முடி நரைத்தல் ஆகிய அனைத்து பிரச்சனைகளுக்கும் வெந்தயம் உங்களுக்கு உதவும்

03

கீல்வாதத்தை நீக்கும்

வெந்தய விதைகளை உணவில் சரியாக சேர்த்துக் கொள்ளும்போது ​​இரத்த ஓட்டத்தில் உள்ள யூரிக் அமிலதத்தின் அளவு குறைகிறது. அதனுடன் கீல்வாதம் ஏற்படும் அபாயமும் குறைகிறது

04

சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்க இதை பண்ணுங்க..

மூட்டு வலிக்கு பழங்களில் இருக்கிறது தீர்வு...

டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுமா..?

More Stories.

இரத்த சோகை சிகிச்சை

இரத்தத்தின் அளவை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், இரத்தத்தின் நச்சுக்களை நீக்குவதன் மூலமும் வெந்தயம் இரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகின்றன

05

வலி நிவாரணமளிக்கும்

முதுகு வலி, நரம்புகளில் உள்ள வலி, வீக்கம், பக்கவாதம், மலச்சிக்கல், வயிற்றில் அசௌகரியம் போன்றவைகளுக்கு வெந்தயம் பயனளிக்கும் ஒரு மருந்தாகும்

06

வலி நிவாரணமளிக்கும்

முழங்கால் மூட்டு வலி முதல் தசைப்பிடிப்பு வரை உடலின் எந்த பகுதியிலும் ஏற்படும் வலிகளுக்கு வெந்தயத்தின் மூலம் சிகிச்சை அளிக்கலாம்

அதிக இரத்தப்போக்கை தடுக்கும்

மூக்கின் வழியாக இரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் காலத்தின் போது நிகழும் அதிக அளவிலான இரத்தப்போக்கு உள்ளிட்ட இரத்தப்போக்கு பிரச்சினைகளுக்கும் வெந்தயம் உதவும்

07

உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்

வைட்டமின் பி12 நிறைந்த 8 உலர் பழங்கள்.!