ஒரு தனிநபரின் உடல் எடை குறியீடு (BMI) 30-க்கு மேல் இருந்தால் அவர் உடல் பருமனாக இருக்கிறார் என்று அர்த்தம்
2025 ஆண்டிற்குள் தோராயமாக 167 மில்லியன் மக்கள் அதிக உடல் எடையோடு இருப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் மதிபிட்டுள்ளது
உடல் பருமனால் உடலில் ஏற்படும் 7 முக்கிய பிரச்சனைகள் குறித்து அடுத்தடுத்த ஸ்லைடில்
இதயத்தில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. 2012-ம் ஆண்டு மாரடைப்பு & இதய நோய் காரணமாக அதிக இறப்பு நேரிட்டதற்கு உடல் பருமன் முக்கிய காரணமாகும்
1
அதிக கொழுப்பு நம் உடலின் இடுப்பு பகுதியில் சேருவதால் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் நம் உடல் போதுமான இன்சுலினை சுரப்பதில்லை
2
அதனையடுத்து உடலில் கொழுப்பு & கார்போஹைடரேட்ஸ்களை கரைப்பதில் சிக்கல் ஏர்படுகிறது. இதன் விளைவாக நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது
உடல் பருமனாக இருப்பதால் நமது எலும்புகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கீல்வாதம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது
3
மேலும் உடல் எடையோடு இருப்பதால் எலும்புகள் & முக்கியமான இணைப்பு பகுதிகளான இடுப்பு மற்றும் முழங்கால்களில் வலி ஏற்படுகிறது
கணையம், சிறுநீரகம், விதைப்பை, மார்பகம், உணவுகுழாய், பெருங்குடல் பகுதிகளில் புற்றுநோய் வருவதற்கு உடல் பருமனும் ஒரு காரணமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன
4
மன நலத்திற்கும் உடல் பருமனுக்கும் தொடர்பு உள்ளது என உறுதியாக கூற முடியாவிட்டாலும், இன்சுலின் எதிர்ப்பு, வீக்கம் ஏற்படுதல் & சமூக அல்லது கலாச்சார காரணிகளும் இதற்கு காரணமாக இருக்கிறது
5
உடல் பருமனால் ஒருவரின் உடல் ஆரோக்கியம் ஏன் பாதிப்படைகிறதோ அதே காரணத்திற்காக தான் அவரின் மனநலமும் பாதிக்கப்படுகிறது
மகப்பேறு சமயத்தில் உடல் பருமனாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படுவதோடு நீரிழிவு நோயும் வரக்கூடும். மேலும் ப்ரீ எக்லாம்சியா போன்ற நோய்கள் தாக்குவதற்கும் வாய்ப்புகள் அதிகம்
6
உடல் பருமன் காரணமாக ஆஸ்துமா மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் என இரண்டு சுவாசப் பிரச்சனைகள் நம்மை தாக்குகின்றன. நம் உடலின் சுவாச செயல்பாட்டில் பிரச்சனை ஏற்படுகிறது
7
உடல் பருமன் காரணமாக மார்பு பகுதியில் அதிக கொழுப்பு படர்வதால், நுறையீரலுக்குச் செல்லும் காற்றுப் பாதை சுருங்குகிறது. இதனால் சுவாசப் பிரச்சனைகள் வருகின்றன