பற்களின் நீங்காத மஞ்சள் கறையை போக்க உதவும் 7 வீட்டு வைத்தியங்கள்.!

இன்று மஞ்சள் கறை படிந்த பற்கள் பலரது சிரிப்பை மறைத்து வைத்து விட்டது. ஒரு நபரின் அழகான சிரிப்பிற்கு மஞ்சள் நிற பற்கள் ஒரு தடையாக இருக்கக்கூடும்

பற்கள் மஞ்சளாக இருப்பது ஒரு சிலருக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. இது அவர்களது தன்னம்பிக்கையை குறைத்து பல வழிகளில் பிரச்சனைகளைத் தருகிறது

புகைப்படம் எடுக்கும்போது பற்கள் வெள்ளையாக தெரிய வேண்டும் என்பதற்காகவே பலரும் பற்களுக்கு டீத் பாலிஷிங் செய்துகொள்கின்றனர். இதை அடிக்கடி செய்வதும் பற்களை சேதப்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்

வழக்கமான புகைபிடித்தல், டீ மற்றும் காபி உட்கொள்ளும் பழக்கம் மற்றும் மரபணு காரணிகளும் பற்கள் மஞ்சள் நிறமாக மாறக்கூடும். தினமும் சரியாக துலக்கினாலும், இந்தப் பிரச்சனை தொடர்ந்து இருக்கலாம்

எனவே பற்களின் நீங்காத மஞ்சள் கறைகளை அகற்ற இந்த 7 வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து செய்து பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும்...

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை

இவை இரண்டும் பற்களில் உள்ள மஞ்சள் கறையைப் போக்க பெரிதும் உதவுகிறது. ஆனால் அதிகப்படியான பேக்கிங் சோடா ஈறுகளுக்கு ஆபத்தானது. எனவே குறைவான அளவு பேக்கிங் சோடா பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி இதனை பயன்படுத்தக் கூடாது

1

தேங்காய் எண்ணெய்

இதை பற்கள் மற்றும் ஈறுகளில் குறைந்த பட்சம் 5 நிமிடங்களுக்காவது மென்மையாக தேய்க்க வேண்டும். இது மஞ்சள் கரையை போக்குவது மட்டுமல்லாமல் பற்சொத்தையையும் தடுக்க உதவும்

2

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல் தூள் அல்லது ஆரஞ்சு தோலின் உட்புறத்தை உங்கள் பற்களில் தேய்க்கவும். தோலில் உள்ள இயற்கை சேர்மங்கள் மேற்பரப்பு கறைகளை உடைப்பதன் மூலம் பற்களை வெண்மையாக்க உதவும்

3

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல் தூள் அல்லது ஆரஞ்சு தோலின் உட்புறத்தை உங்கள் பற்களில் தேய்க்கவும். தோலில் உள்ள இயற்கை சேர்மங்கள் மேற்பரப்பு கறைகளை உடைப்பதன் மூலம் பற்களை வெண்மையாக்க உதவும்

4

கடுகு எண்ணெய் மற்றும் உப்பு

பாக்டீரியாக்களை எதிர்க்க கூடிய பண்பு உள்ள கடுகு எண்ணெய் மற்றும் பற்களில் படிந்திருக்கும் கறைகளைப் போக்கக்கூடிய உப்பை கலந்து பற்களில் ஒரு சில நிமிடங்கள் பொறுமையாக தேய்த்து தண்ணீரால் வாயை கொப்பளிக்கவும். இந்த கலவையையும் மிதமான அளவு பயன்படுத்த வேண்டும்

5

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பற்களை பராமரிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. ஸ்ட்ராபெர்ரியை நசுக்கி, அதை பேஸ்டுடன் கலந்து பற்களில் தடவவும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளியுங்கள்

6

பேக்கிங் சோடா

பல் துலக்கும் போது சிறிது பேக்கிங் சோடாவை பேஸ்ட் மீது தூவி தேய்க்கவும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து வாருங்கள். பேக்கிங் சோடா பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்கிவிடும்

7

next

எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்.!