யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைந்து அதன் விளைவாக உடலில் உற்பத்தி செய்யப்படும் ஒரு கழிவுப் பொருளாகும். இவை நாம் உண்ணும் பல உணவுகளில் காணப்படும் மூலக்கூறுகளாகும்
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பது ஹைப்பர்யூரிசிமியா எனப்படும் ஒரு நிலைக்கு வழிவகுக்கும். இதற்கு சரியான சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்
ஆண்களுக்கு, குறிப்பாக இரவு நேரத்தில் முழங்கால்கள் மற்றும் கால்களில், அதிக யூரிக் அமில அளவுகளின் அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது என்பதை இங்கே பார்க்கலாம்...
முழங்கால்களை முழுமையாக வளைப்பதில் அல்லது நேராக்குவதில் சிரமம், வலி மற்றும் விறைப்பு ஆகியவை யூரிக் அமிலம் படிவதால் ஏற்படும் அறிகுறிகள் ஆகும்
1
தொடர்ச்சியான சோர்வு மற்றும் பலவீனம் தினசரி செயல்பாடுகளை சவாலாக ஆக்குகிறது. இதனால் கால் மற்றும் முழங்காலில் வலி அதிகரிக்கிறது
2
யூரிக் அமிலத்தின் படிகமயமாக்கல் காரணமாக முழங்கால்கள் மற்றும் கால்களில் சென்சிட்டிவிட்டி, அசௌகரியம் மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது
3
முழங்கால்கள் மற்றும் கால்களில் அதிகரித்த அசௌகரியம் காரணமாக தூக்க முறைகள் சீர்குலைந்து, தூக்கமின்மை மற்றும் பகல்நேர சோர்வுக்கு வழிவகுக்கும்
4
முழங்கால்கள் மற்றும் கால்களில் அதிகரித்த வெப்பம் & சிவத்தல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகரித்த இரத்த ஓட்டம் மற்றும் வீக்கம் ஆகியவை இதில் அடங்கும்
5
கால்கள் மற்றும் முழங்கால்களில் கடுமையான வலி ஏற்படுவதால் தினசரி செயல்பாடுகள் பாதிக்கிறது
6
நரம்பு சுருக்கம் அல்லது வீக்கத்தின் காரணமாக கால்கள் மற்றும் முழங்கால்களில் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு ஏற்படும்
7
இங்கே குறிப்பிட்டுள்ளவை பொதுவான தகவலை மட்டுமே தருகிறது மற்றும் தகுதியான மருத்துவ கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்.!