நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும்போது ஏற்படும் ஒரு நோயாகும்
நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸ் தான் இன்சுலின் அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது
இரத்த சர்க்கரை உள்ளவர்கள் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய 7 காய்கறிகள் அடுத்தடுத்த ஸ்லைடில்...
1
வெங்காயம் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது
2
கேரட் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான விருப்பமாக அமைகிறது
3
பொட்டாசியம், வைட்டமின் பி & சி, போலிக் அமிலம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும்
4
இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், செலினியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த ப்ரோக்கோலியை நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் தங்களின் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
5
அதிக அளவு நீர்ச்சத்து உள்ள வெள்ளரிக்காயை நீரிழிவு நோயாளிகள் தங்களின் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் அல்லது கட்டுப்படுத்தவும் முடியும்
6
பச்சை மற்றும் சமைத்த பூண்டு இரண்டும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிகபட்ச நன்மைகளைப் பெற ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு பூண்டு பல் சாப்பிடுங்கள்
7
மக்னீசியம், ஃபோலேட், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ள கீரை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் சிறந்தது