அசைவம் தவிர வைட்டமின்-பி12 நிறைந்த 7 சைவ உணவுகள்.!

வைட்டமின்-பி12 உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் & டிஎன்ஏவை உருவாக்குகிறது. நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் சிறந்த ஆரோக்கியத்திற்கும் இவை அவசியம்

வைட்டமின்-பி12 குறைபாடு காரணமாக உடலில் போதுமான அளவு இரத்த சிவப்பணுக்களை உருவாக்க முடியாது. மேலும், இது நரம்பு மண்டலம் தொடர்பான பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அதீத உடல் சோர்வு மற்றும் சோம்பல், உடல் பலவீனம், பசியின்மை, மனச்சோர்வு, தூக்கமின்மை, மூச்சுத்திணறல், செரிமான கோளாறு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்

முட்டை, இறைச்சி-மீன் போன்ற அசைவப் பொருட்களில் வைட்டமின்-பி12 அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது

ஆனால் சில அசைவ உணவு பொருட்களிலும் வைட்டமின்-பி12 நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா.? அவை என்னென்ன உணவுகள் என்று அடுத்தடுத்த ஸ்லைடில் பார்க்கலாம்

முழு தானியங்களிலும் வைட்டமின்-பி12 நிறைந்துள்ளது. ஓட்ஸ் மற்றும் இதர செறிவூட்டப்பட்ட உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

முழு தானியங்கள்

1

வைட்டமின் செறிவூட்டப்பட்ட ஈஸ்டில் வைட்டமின் பி12 நிறைந்திருக்கிறது. ஒரு தேக்கரண்டி உலர்ந்த ஈஸ்டில் 2.4 mcg அளவுக்கு வைட்டமின் B12 உள்ளது

உலர்ந்த ஈஸ்ட்

2

வைட்டமின்-பி12 நிறைந்த சோயா பால் உடலில் உள்ள வைட்டமின்-பி12 குறைபாட்டை பெருமளவுக்கு சரிசெய்யும்

சோயா பால்

3

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த டெம்பே என்பது ஒரு வகை புளித்த சோயாபீன் ஆகும். இது வைட்டமின்-பி12 இன் சிறந்த ஆதாரமாகவும் கருதப்படுகிறது

டெம்பே

4

நோரி என்ற உலர்ந்த கடற்பாசியில் வைட்டமின் பி12 நிறைய உள்ளது. ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 4 கிராம் அளவுக்கு கடற்பாசியை எடுத்துக் கொண்டாலே ஓரளவு வைட்டமின் பி12 கிடைத்துவிடும்

கடல் பாசி

5

பால் பொருட்களான பால், தயிர், மோர் ஆகியவை வைட்டமின்-பி12 இன் ஆதாரமாகக் கருதப்படுகிறது

பால் பொருட்கள்

6

டோஃபு வைட்டமின்-பி12 இன் சிறந்த ஆதாரமாகவும் கருதப்படுகிறது. எனவே டோஃபுவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

டோஃபு

7

இரவு உணவின் போது தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்.!

Arrow