வீட்டில் பல்லி வராமல் இருக்க 7 டிப்ஸ்!

உங்கள் வீட்டில் பல்லிகளின் தொல்லை தாங்க முடியலையா? இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை முயற்சி செய்து பாருங்கள்.

பல்லிகள் உங்கள் விட்டில் நுழையாமல் இருக்க முதலில், பல்லி நுழையும் அளவிற்கு எந்தெந்த இடங்களில் துளைகள் அல்லது இடைவேளிகள் இருக்கின்றதோ அதைக் கண்டறிந்து சீல் வைக்கவும்.

நொறுக்குத் தீனிகள் மற்றும் கீழே சிந்தப்படும் உணவுத் துகள்களை அவ்வபோது சுத்தம் செய்திடுங்கள். மேலும் காற்று புகாத கொள்கலன்களில் சேமித்து வைய்யுங்கள்.

பல்லிகள் அடிக்கடி வந்து போகும் இடங்களில் வேப்ப எண்ணெய், பூண்டு அல்லது வெங்காயத்தை பயன்படுத்துவது ஒரு இயற்கை தீர்வாகும்.

பல்லிகள் அடிக்கடி தங்கும் இடங்களான தோட்டம் அல்லது வெளிபுற தாவரங்களை ஒழுங்கமைத்து சீராக பராமரியுங்கள்.

கடைகளில் கிடைக்கும் ஒட்டும் பலகைகள் அல்லது ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தி பல்லிகளைப் பிடிக்கலாம்.

next

இதய ஆரோக்கியத்திற்கு உகந்த 5 சமையல் எண்ணெய்கள்!