தற்போதைய காலத்தில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நமது உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம்
நீரிழிவு நோயாளிகளுக்கு இயற்கையாகவே சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் 8 ஆயுர்வேத பானங்கள் அடுத்தடுத்த ஸ்லைடில்...
இஞ்சி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் சிறந்த டீடாக்ஸ் பானமாகச் செயல்படுகிறது. அதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது
01
கற்றாழை இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது
02
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் பல கூறுகள் வெந்தய நீரில் உள்ளன
03
ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகளுடன் வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சாற்றை காலையில் குடிப்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை சீராக்க உதவுகிறது
04
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடனடியான உடலில் எலக்ட்ரோலைட்டுகளை தந்து நாள் முழுக்க எனர்ஜியுடன் வைத்திருக்கும். ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்
05
நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட வேப்பம்பூ சாறு உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்
06
பாகற்காய் நீரிழிவு நோய்க்கான புகழ்பெற்ற ஆயுர்வேத தீர்வாகும். பாகற்காய் சாற்றை வெறும் வயிற்றில் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது
07
மஞ்சளில் குர்குமின் உள்ளதால் இது அழற்சி எதிர்ப்பு மற்றும் இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது
08
உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்