குழந்தைகளை பாதிக்கும் புற்றுநோய்... ஆரம்பகட்டத்திலேயே கண்டறிய உதவும் 8 அறிகுறிகள்.!

ஒவ்வொரு வருடமும் 4,00,000 குழந்தைகள் (14 வயது வரையில்) புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது

ரத்தப் புற்றுநோய், மூளை புற்றுநோய், லிம்போமா, நரம்புத்திசு புற்றுநோய், வில்ம்ஸ் கட்டிகள் போன்றவை குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான புற்றுநோய்களை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம்

சரியான நேரத்தில் நோயை கண்டறியாமை, சிகிச்சையை பாதியிலேயே விட்டுவிடுவது, முறையான சிகிச்சை இல்லாமை, ஆரம்பத்திலேயே தேவையான பரிசோதனையை எடுக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் மட்டுமே புற்றுநோய் பாதித்த குழந்தைகள் இறக்க நேரிடுகின்றன

ஆகையால் ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்துவிட்டால், 80% குழந்தைகளை குணப்படுத்திவிடலாம். எனினும், குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயை எவ்வளவு எளிதில் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாது

ஆனால், அதேசமயம் புற்றுநோய் தொடர்பான ஆரம்ப அறிகுறிகள் ஏதாவது உங்கள் குழந்தைகளிடம் தெரிகிறதா என்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்

இதுகுறித்து விளக்கம் தருகிறார் ஆஸ்தெர் CMI மருத்துவமணையின் ரத்தவியல், புற்றுநோயியல் மற்றும் குழந்தை நல மருத்துவரான டாக்டர்.ரகுராம்

More Stories.

உங்கள் பிள்ளைகள் உயரமாக வளர வேண்டுமா..?

குழந்தைகளிடம் நாம் கேட்க வேண்டிய 8 கேள்விகள்...

குழந்தைகளை தாக்கும் நிபா வைரஸ்...

உங்கள் குழந்தைகளுக்கு அடுத்தடுத்த ஸ்லைடுகளில் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஏதாவது இருந்தால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்

ஒரு வாரத்திற்கு மேலாக காய்ச்சல் மற்றும் அதோடு சேர்த்து இரவு நேரத்தில் வியர்வை வருதல்

1

காரணமேயில்லாமல் காயம் ஏற்படுதல் அல்லது ரத்தம் கசிதல். சருமம் வெளிரிப் போயிருப்பது

2

பசியின்மை, உடல் எடை குறைதல், மாதக் கணக்கில் சோர்வாக இருப்பது

3

காலை வேளைகளில் கடுமையான தலைவலி, அதோடு சேர்த்து வாந்தி

4

More Stories.

உங்கள் பிள்ளை அடிக்கடி தூக்கத்தில் உளறுகிறதா..?

பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வது எப்படி..?

நகரங்களில் வாழும் குழந்தைகள் சுவாசத்தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறார்களா..?

நடப்பதில் தடுமாற்றம், அடிக்கடி கீழே விழுவது, நிதானம் இல்லாமை

5

குழந்தைகள் விளையாடும் போது எலும்பில் வலி உண்டாவது. இரவு நேரத்தில் இந்த வலி அதிகமாகி அவர்களை நிம்மதியாக தூங்கவிடாது

6

பார்வை குறைபாடு, பார்ப்பதெல்லாம் இரண்டாக தெரிவது, எதிரில் இருப்பவர்கள் வெள்ளை நிறத்தில் தெரிவது

7

உடலில் முக்கியமாக அடிவயிறு, கழுத்து, மார்பு, அக்குள் போன்ற பகுதிகளில் தோன்றும் கட்டிகள் அல்லது வீக்கம் சீக்கிரம் குணமாகாமல் இருப்பது

8

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும்  10 நன்மைகள்.!