பொறுத்துக்கொள்ள முடியாத மாதவிடாய் வலியை குறைக்கக்கூடிய 8 பயனுள்ள வீட்டு வைத்தியங்கள்.!

மாதவிடாய் சமயத்தில் தசை பிடிப்புகள் மற்றும் வயிற்று வலி போன்றவை பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சினைகள் ஆகும். ஆனால் இதை தீர்க்க ஒவ்வொரு முறையும் வலி நிவாரணிகளை நம்புவது சிறந்ததல்ல

சில வீட்டு வைத்தியங்கள் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் வலியைக் குறைக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா.?

அந்த வகையில் சில நிமிடங்களில் மாதவிடாய் அசௌகரியத்தைக் குறைக்கக்கூடிய 8 பயனுள்ள தீர்வுகள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...

மூலிகை தேநீர்

இஞ்சி, பெருஞ்சீரகம் மற்றும் புதினா கலந்த தேநீர் குடிப்பது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் வயிற்று வலியிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணம் அளிக்கிறது. கெமோமில் (சாமந்தி) தேநீர் வலியைக் குறைக்கவும் தசைகளை தளர்த்தவும் உதவுகிறது

1

ஓம விதைகள்

லேசாக வறுத்த ஓம விதைகளை உப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கலந்து உட்கொள்வது வயிற்று வலி மற்றும் வாயு பிரச்சனைகளைக் குறைக்கும். இது மாதவிடாய் வலியைக் குறைப்பதில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்

2

இலவங்கப்பட்டை

அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள இது மாதவிடாய் தொடர்பான வீக்கம் மற்றும் பிடிப்புகளை குறைக்க உதவுகின்றன. இஞ்சி, இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் மற்றும் புதினா இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயத்தை குடிப்பது உடலுக்கு வெப்பத்தை அளித்து அசௌகரியத்தை நீக்குகிறது

3

மஞ்சள் நீர்

மஞ்சள் ஒரு இயற்கையான வலி நிவாரணி ஆகும். மஞ்சள், இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வாரத்திற்கு ஒரு முறை குடிப்பது மாதவிடாய் வலி மற்றும் அசௌகரியத்தைப் போக்க உதவும்

4

உடற்பயிற்சி - யோகா

மிதமான உடற்பயிற்சி மற்றும் யோகா இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. தினமும் சில நிமிடங்கள் கால், கைகளை அசைத்து உடற்பயிற்சியில் ஈடுபடுவது அல்லது நடைபயிற்சி ஆகியவை நன்மை பயக்கும்

5

சமச்சீர் உணவு

கேரட், வெள்ளரி போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது செரிமானத்தை ஆதரிக்கிறது மற்றும் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுவதோடு மாதவிடாய் வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது

6

நீர்ச்சத்து

உடலை நன்கு நீர்ச்சத்து மிக்கதாக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பது வீக்கம் மற்றும் பிடிப்புகளைப் போக்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீர் மற்றும் மூலிகை பானங்கள் கூட நன்மை பயக்கும்

7

சூடான எண்ணெய் மசாஜ்

சூடான நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைக் கொண்டு வயிற்றை லேசாக மசாஜ் செய்வது தசைகளைத் தளர்த்தி வலியைக் குறைக்கிறது. கடுமையான பிடிப்புகளை அனுபவிக்கும் பெண்களுக்கு இந்த தீர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

8

next

பாலுக்கு நிகராக அதிக கால்சியம் நிறைந்த 8 பழங்கள் மற்றும் காய்கறிகள்.!