ஆயுர்வேதத்தின் படி ஒரு சில உணவு வகைகளை சேர்த்து சாப்பிடக் கூடாது. அப்படிச் செய்தால், உங்கள் செரிமான உறுப்புகள் பாதிக்கப்பட்டு, தீவிரமான உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம்
பொருந்தாத உணவு வகைகளை சேர்த்து சாப்பிடுவதால், உங்கள் செரிமானக் கோளாறு, அழற்சி, ஆட்டோ-இம்யூன் நோய்கள் மற்றும் சரும குறைபாடுகள் ஏற்படலாம்
இவ்வகையான உணவுகளை 'விருத்த ஆகாரம்' (ஒன்றோடொன்று முரண் படும் உணவு) என்று ஆயுர்வேதம் கூறுகிறது
எனவே ஆயுர்வேதத்தின் படி நீங்கள் சாப்பிடும் உணவுகளில், எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை பற்றி தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...
பால் மற்றும் மீன் உணவுகளை எப்போதுமே சேர்த்து சாப்பிடக் கூடாது. பால் என்பது குளிர்ச்சியூட்டும் உணவுப்பொருள், ஆனால் மீன் வெப்பமூட்டும் தன்மைக் கொண்டது. இந்த இரண்டு உணவையும் சேர்த்து உண்பது ரத்த சம்மந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தும்
1
பாலக்கீரை மற்றும் பனீர் இரண்டும் தனித்தனியே சத்தான உணவுகள் என்றாலும் அவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது சிறந்ததாக இருக்காது. பனீரில் உள்ள கால்சியம், பசலைக்கீரையில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் தலையிடக்கூடும். இதனால் உணவின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து நன்மைகளும் குறையும்
2
புளிப்புச் சுவையுடைய பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, கிவி, உள்ளிட்ட பழங்கள் & வாழைப்பழத்தை எப்போதுமே பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. பால், தயிர், மோர் ஆகியவற்றை பழங்களோடு சேர்த்து சாப்பிடும் போது சளி, இருமல், அலர்ஜி ஏற்படலாம். அது மட்டுமின்றி செரிமானம் ஆகாமல் இந்த உணவுகள் உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கி விடும்
3
டீயில் டானின் மற்றும் காஃபின் போன்ற ஊட்டச்சத்து எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. இது உடலில் இரும்பு மற்றும் கால்சியம் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. எனவே, எப்போதும் டீயை தனியாக அருந்துங்கள். காலை உணவு அல்லது சிற்றுண்டியுடன் எடுத்துக்கொள்ள வேண்டாம்
4
தேனை எப்போதுமே சூடு படுத்தக்கூடாது. பல்வேறு குணமாக்கும் பண்புகள் கொண்ட தேனில் இருக்கும் என்சைம்கள் தேனை சூடுபடுத்தும்போது அழிந்து விடும். சத்துக்கள் நீங்குவது மட்டுமின்றி, சூடான தேன் உடலில் Ama எனப்படும் நச்சுக்களை உருவாக்கி செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்
5
நீங்கள் சூடான உணவை உட்கொள்ளும்போது, உங்கள் உடல் செரிமானத்திற்கு உதவும் வெப்பத்தை வெளியேற்ற வயிற்றுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மாறாக, குளிர்ந்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் வயிற்றில் இரத்த நாளங்கள் சுருங்குவதற்கு வழிவகுக்கும். இந்த கலவையானது வீக்கம், வாயு அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும்
6
ஏதேனும் ஒரு உணவில் நீங்கள் இரண்டையுமே சேர்க்கிறீர்கள் என்றால் சம அளவில் சேர்க்கக் கூடாது. தனித்தனியே இரண்டுமே அபரிமிதமான ஊட்டச்சத்துகளை கொண்டிருந்தாலும், ஒன்றாக சேர்க்கும் போது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், இரண்டையும் சேர்த்து சமைக்கும் போது ஏதேனும் ஒரு பொருளை அதிகமாக பயன்படுத்த வேண்டும்
7
பாலில் இருந்து வரும் கால்சியம், பேரீச்சம்பழத்தில் இருந்து இரும்பை உறிஞ்சும் உடலின் திறனில் தலையிடக்கூடும். இது உணவில் இருந்து ஒட்டுமொத்த இரும்புச்சத்து உறிஞ்சுதலைக் குறைக்கக்கூடும். குறிப்பாக, உங்களுக்கு இரத்த சோகை இருந்தால் இந்த கலவை இரும்புச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கும்
8
இந்த தகவல் நியூஸ் 18 தமிழின் கருத்து அல்ல மாறாக ஊடகங்களில் இருந்து பெறப்பட்டது
மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகளை எளிதாக்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த 7 உணவுகள்.!