ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல இரவு தூக்கம் அவசியம். இல்லையென்றால் மனநிலை மாற்றங்கள், இதய நோய், எரிச்சல், எடை அதிகரிப்பு, எடை இழப்பு , மந்த நிலை உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்
இரவு தூக்கம் கெட பல காரணங்கள் இருந்தாலும் இவை அனைத்திலும் மிகவும் பொதுவான ஒன்று படுக்கைக்கு செல்லும் முன் சில உணவுகளை சாப்பிடுவது
நிம்மதியான உறக்கத்திற்கு உணவு பழக்கத்தையும் கவனத்தில் கொள்ள நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தூங்க செல்லும் முன் தவிர்க்க வேண்டிய 8 உணவுகள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...
வெள்ளரிகளில் கக்கூர்பிட்டாசின் எனப்படும் ஒரு தனிமம் (Element) நிரம்பியுள்ளது. இது செரிமான சிக்கல்களை ஏற்படுத்தி நல்ல இரவு தூக்கத்தில் குறுக்கிட்டு நிம்தியான தூக்கத்தை கெடுக்கிறது
1
அதிக மற்றும் கனமான இரவு உணவுகள் உங்கள் தூக்கத்தின் மோசமான எதிரி ஆகும். இவை எப்போதும் ஜீரணமாக அதிகநேரம் எடுத்துக்கொள்ளும். மேலும் இவை இரவில் வீக்கம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்
2
இனிப்புகள் மற்றும் மிட்டாய்கள் உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம். இது உங்களுக்கு தற்காலிக சக்தியை அளிக்கிறது. மேலும் இவை இரவில் உங்கள் தூக்கத்தையும், வயிற்றையும் தொந்தரவு செய்யும்
3
ஆல்கஹால் முதலில் உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் பின்னர் அது உங்கள் தூக்க சுழற்சியை சிதைத்துவிடும். மேலும் இது உங்களுக்கு நீரிழப்பு மற்றும் குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தும்
4
காரமான உணவை உண்பது நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை தூண்டி, உங்கள் தூக்கத்தை கெடுக்கும். கூடுதலாக, இது உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் மற்றும் தூங்குவதை கடினமாக்கும்
5
உலர் பழங்களில் உள்ள அதிக நார்ச்சத்து, குறைந்த நீர்சத்து உள்ளிட்டவை செரிமான ஆரோக்கியத்தை பாதிக்க கூடும். எனவே உங்களது அமைதியான தூக்கத்தை தடுக்கும் வாய்ப்பு உள்ளது
6
படுக்கைக்கு முன் சாக்லேட் சாப்பிடுகிறீர்கள் அல்லது காபி அருந்துவீர்கள் என்றால் அது மோசமான யோசனை. காஃபின் உங்கள் நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி ஓய்வெடுப்பதையும், தூங்குவதையும் கடினமாக்குகிறது
7
ஃபிரைஸ் அல்லது சிப்ஸ் போன்ற க்ரீஸ் ஸ்நாக்ஸ்களை உறங்குவதற்கு முன் சாப்பிடக்கூடாது. இவை அஜீரணத்தை உண்டாக்கும்மற்றும் உங்களை நள்ளிரவில் அதிக சிற்றுண்டி சாப்பிட ஏங்க வைக்கும்
8
இங்கே குறிப்பிட்டுள்ளவை பொதுவான தகவலை மட்டுமே தருகிறது மற்றும் தகுதியான மருத்துவ கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை
இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவதால் கிடைக்கும் 6 ஆரோக்கிய நன்மைகள்.!