நம்முடைய ஆரோக்கியமான உணவின் ஒரு முக்கிய பகுதி புரதம் (புரோட்டீன்) ஆகும்
நீங்கள் உங்கள் தசையை கட்டியெழுப்ப விரும்பினாலும், உடல் எடையை குறைக்க விரும்பினாலும் அல்லது சமச்சீரான உணவை பராமரிக்க அதிக புரதச்சத்து உள்ள உணவுகள் கணிசமான பலன்களை அளிக்கும்
தோல் இல்லாத, எலும்பு இல்லாத கோழியின் நெஞ்சு பகுதி 31 கிராம் ப்ரோட்டீனுடன் சிறந்த லீன் ப்ரோட்டீன் சோர்ஸ்களில் ஒன்றாகும். இது அதிக புரத உணவைப் பின்பற்றுபவர்களுக்கு ஏற்றதாக அமைகிறது
இருப்பினும், ஒவ்வொரு நாளும் கோழி சாப்பிடுவது சலிப்பை ஏற்படுத்தும். எனவே கூடுதல் புரத ஊக்கத்திற்கு கோழியை விட அதிக புரதம் கொண்ட இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்...
தமிழில் சூறை மீன் என்று குறிப்பிடப்படும் டுனா மீன் தண்ணீரில் உள்ள நிலையில் சுமார் 29 கிராம் புரதம் கொண்டு உள்ளது.இந்த மீனில் அதிக புரதச்சத்து மட்டுமின்றி, நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு நல்ல பலன்களை தரும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்துள்ளன
1
வான்கோழி நெஞ்சுக்கறியில் சுமார் 29 கிராம் புரதம் உள்ளது. கோழியை போலவே, வான்கோழியின் நெஞ்சு பகுதி மெலிந்ததாகவும், புரதச்சத்து நிரம்பியதாகவும் இருப்பதால் குறைந்த கொழுப்புள்ள உணவுக்கு சிறந்த தேர்வாக இது இருக்கிறது
2
பாதாமில் 21 கிராம் ப்ரோட்டீன் உள்ளது. பாதம் பருப்புகளில் ஆரோக்கிய கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றுடன் தாவர அடிப்படையிலான புரத மூலம் இருக்கிறது. எனவே இவை இதயம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன
3
சால்மன் மீனானது ஹை-குவாலிட்டி ப்ரோட்டீனை வழங்குகிறது. 100 கிராம் சால்மன் மீனில் சுமார் 25 கிராம் ப்ரோட்டீன் உள்ளது. மேலும் இவ்வகை மீன்களில் அத்தியாவசிய ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும இருப்பதால் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு ஏற்றது
4
நார்ச்சத்து நிறைந்துள்ள இவை செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. அதே போல பருப்பு வகைகளை சமைக்கும் போது இவை 25 கிராம் ப்ரோட்டீன் உள்ளடக்கத்துடன் ஒரு சிறந்த தாவர அடிப்படையிலான புரத ஆதாரமாக இருக்கிறது
5
பிளெயின், நான்-ஃபேட் கிரீக் யோகர்ட்டில் 10 கிராம் புரதச்சத்து உள்ளது. மேலும் புரதம் மட்டுமின்றி கிரீக் யோகர்ட்டானது ப்ரோபயாடிக்ஸ்களால் நிரம்பியுள்ளது. இது தசைகளை சரி செய்வதையும் மற்றும் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது
6
பன்னீர் அல்லது காட்டேஜ் சீஸில் 100 கிராமுக்கு 11 கிராம் என்ற அளவில் கேசீன் ப்ரோட்டீன் காணப்படுகிறது. இது மெதுவாக ஜீரணிக்கப்படுகிறது மற்றும் தசைகளை மீட்டெடுக்க தூங்க செல்லும் முன் எடுத்து கொள்ள கூடிய ஒரு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது
7
100 கிராம் அல்லது தோராயமாக இரண்டு பெரிய முட்டைகளில் சுமார் 13 கிராம் ப்ரோட்டீன் கன்டென்ட் காணப்படுகிறது. மேலும் முட்டைகள் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டிருக்கின்றன
8
100 கிராம் டோஃபுவில் 8 கிராம் என்ற அளவில் ப்ரோட்டீன் உள்ளது. எனவே இது தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும். மேலும் இதில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் நிறைந்திருக்கிறது
9
கொழுப்பு கல்லீரல் நோயை இயற்கையாக தடுக்க உதவும் 7 பழங்கள்.!