வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என ஆய்வுகள் ஒருபக்கம் நடந்து வந்த போதிலும், இதிலுள்ள ஊட்டசத்துகள் காரணமாக நம்முடைய டயட்டில் இதையும் சேர்த்துக்கொள்வது நல்லது
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் வெண்டைக்காய் துண்டுகளை இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்னர் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த நீரை குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது
நமது உடலை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வெண்டைக்காயில் அதிகளவு உள்ளது. நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் உடலின் பல்வேறு செயல்பாடுகளிலும் இந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட் முக்கிய பங்கு வகிக்கிறது
1
வெண்டைக்காயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முகப்பருவைக் குறைத்து, பளபளப்பான நிறத்தை ஊக்குவிக்க உதவும்
2
உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் திரவ பானங்களை குடிக்க வேண்டுமென விரும்பினால் சுவை மிகுந்த வெண்டைக்காய் நீரை பருகுங்கள். இது உங்கள் உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும்
3
வெண்டைக்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் இது நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணர உதவும், எடை மேலாண்மைக்கு உதவும்
4
குறைவான கலோரி கொண்ட வெண்டைக்காயில் நார்ச்சத்து, வைட்டமின் சி & கே, பொட்டாசியம், மாக்னீசியம் போன்ற தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகியவை நிறைந்துள்ளது. இந்த நீரை பருகுவதன் மூலம் நீர்த்த வடிவத்தில் இந்த சத்துகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கின்றன
5
வெண்டைக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, உடல் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவும்
6
வெண்டைக்காய் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும், இது இருதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது
7
வெண்டைக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமானப் பாதையில் உள்ள குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதை மெதுவாக்குவதற்கு உதவுகிறது. இதன் மூலம் உங்கள் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது
8
வெண்டைக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. இந்த நீரை பருகுவதன் மூலம், இது மலமிளக்கியாக செயல்பட்டு சீரான இடைவெளியில் மலம் கழிவதற்கு வழிவகை செய்கிறது
9
வெண்டைக்காய் ஊற வைத்த நீரை பருகுவதால் சில ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்றாலும், எல்லா நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாக இதை கருதக்கூடாது. மேலும் வெண்டைக்காய் ஊற வைத்த நீர் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது
ஒருவேளை உங்கள் டயட்டின் ஒரு பகுதியாக இந்த வெண்டைக்காய் நீரை பருக வேண்டும் என நினைத்தால், உங்கள் மருத்துவரிடம் இதுகுறித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்
டயட் இல்லாமல் சிறந்த உடல் எடையை பராமரிக்க 10 வழிகள்.!