நரம்புகள் வலுப்பெற உதவும் 9 சைவ உணவுகள்.!

ஊட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல

ஊட்டச்சத்து உள்ள உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால், பெர்னீஷியஸ், அனீமியா எனும் ரத்தத்தை பாதிக்கும் நரம்பு நோய்  ஏற்பட வாய்ப்புள்ளது

வைட்டமின் பி 12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி, தள்ளாட்டம், வலுக்குறைவு எனக் கொடுத்துவிடும்

நரம்பு வலுப்பெறவும், நரம்பியல் நோய்கள் தீரவும் உதவும் 9 சைவ உணவுகள் அடுத்தடுத்த ஸ்லைடில் 

சிட்ரஸ் பழங்கள்

1

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் நரம்புகள் சேதமடையாமல் பாதுகாக்கிறது

புரோக்கோலி

2

மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை குறையில்லாமல் சரிச்செய்வதோடு அசிட்டைல் கோலினை பாதுகாக்கிறது. நரம்பியல் சிதைவுகளால் உண்டாகும் அல்சைமர் எனும் மறதி நோயை தடுக்கிறது

பச்சை இலை காய்கறிகள்

3

இந்த காய்கறிகளில் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை நரம்பு சேதத்தை சரிசெய்ய அவசியம்.

லவங்கப்பட்டை

4

தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது நரம்புகளுக்கு நலம் தரும்

குயினோவா

5

குயினோவாவில் உள்ள ஃபோலேட், வைட்டமின் ஈ மற்றும் பி6 ஆகியவை நரம்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது

அவகேடோ

6

உங்கள் நினைவாற்றலை மேம்படுத்தும் வகையில் செயல்படும் அவகேடோ இதயத்தையும் பாதுகாக்கிறது மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது

கீரை

7

பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளுக்கு நல்லது.

ப்ளூபெர்ரி

8

இவற்றில் ஆந்தோசயனின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உங்கள் நரம்புகளை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது

பூசணி விதைகள்

9

இந்த விதைகளில் மெக்னீசியம், தாமிரம் மற்றும் இரும்புச் சத்துகள் உள்ளன இவை அனைத்தும் நரம்புகளைப் பாதுகாக்க உதவுகின்றன

பெண்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்றின் 8 அறிகுறிகள்.!