விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக 75 % விவசாயம் விளங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக விவசாயிகள் அனைவருமே அதிகளவில் நெல் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்
அந்த வகையில் பல விவசாயிகள் இயற்கை முறையில் நெற்பயிர்களை பயிரிட்டு சாகுபடி செய்து நல்ல மகசூலையும் லாபத்தையும் பெற்று வருகின்றனர்
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் வி சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த 68 வயது மூதாட்டி 45 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறார்
இவர் பிஏ எக்கனாமிக்ஸ் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கணவர் இறந்த பிறகு விவசாயமே முழு தொழிலாக ஈடுபட்டு வருகிறார்
இந்நிலையில் இயற்கை விவசாயத்தில் நாட்டம் கொண்ட பாண்டியன் என்ற நபரின் அறிவுரையின்படி முதன்முறையாக இயற்கை முறையில் சீரக சம்பா என்ற நெல் ரகத்தை பயிரிட்டுள்ளார் கீதா
மேலும் நெல் சாகுபடி முறை பற்றி மூதாட்டி கீதா கூறுகையில் 45 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறேன். ஆனால் தற்போது இயற்கை விவசாயம் செய்ய வேண்டுமென்று நோக்கில் நெல்களை சாகுபடி செய்துள்ளேன்
எந்தவொரு தீங்கும் இல்லாத இயற்கை முறைப்படி விளைவித்த நெல்களை சாப்பிட வேண்டும் என்ற நோக்கில் லாபமே இல்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் உடல் ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிட என்று கருதி நெல்களை பயிரிட்டு உள்ளேன் என்றார்
மேலும் சீரக சம்பா நெல்லுக்கு எனக்கு தெரிந்த அனைத்து வகையிலும் இயற்கை உரங்களான அமிர்த கரைசல், வேப்ப எண்ணெய் கரைசல், புண்ணாக்கு போன்றவற்றை பயன்படுத்தியுள்ளேன்
எனக்கு ஏற்பட்ட பல சந்தேகங்களை மற்ற விவசாயிகளிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி பல வழிமுறைகளை பின்பற்றி நெல்களை சாகுபடி செய்துள்ளேன்
தற்போது அனைத்து நெற்கதிர்களும் நன்றாக வளர்ந்து வருகிறது. நிச்சயமாக நல்ல மகசூல் ஈட்டி லாபம் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் என்று பாட்டி கீதா கூறினார்
மேலும் மற்ற விவசாயிகள் முடிந்த அளவிற்கு இயற்கை விவசாயம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்