மதுரையில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கோயில் கொண்ட ரம்மியமான இடம்.!

மதுரை நாகமலை புதுக்கோட்டை செல்லும் வழியில் கீழக்குயில் குடி என்ற கிராமத்தில் இருக்கும் குடி அய்யனார் கோயில் உள்ளது. 

வெறும் கோயில் மட்டும் என்றில்லாமல், இந்த கோவிலுக்கு போகும் வழியிலேயே மலைகளை ரசித்து கொண்டே செல்லும் வகையில் மரங்கள் நிறைந்த ஒரு பகுதியில் கம்பீரமான சிலைகளைக் கொண்டு கோயில் நுழைவு பகுதியும்

கோயிலுக்கு அருகிலேயே ஒரு அழகான சமணர் மலையும் கோவிலுக்கு முன்பு 3 ஏக்கரில் தாமரை குளமும் அழகா காட்சியளிக்கிறது. இந்த குளத்தில் துள்ளி குதிக்கும் மீன்களையும் குளத்தில் இருக்கும் தாமரை மலர்களும் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும்

இந்த கோயில் 16 ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் கோயில் என வரலாறு கூறுகிறது. இந்தக் கோயிலின் மூலவராக அய்யனாரும், காவல் தெய்வமாக கருப்பண்ணசாமி, 

பைரவர் உக்கிறபாண்டியன், பாண்டியராஜன், வீரபத்திரர், முனியாண்டி, சோனை சாமி, இருளாயி அம்மன், முத்து கருப்புசாமி போன்ற பல தெய்வங்களும் உள்ளன

அந்த காலத்தில் அய்யனார் மற்றும் காவல் தெய்வங்கள் மட்டும் இருந்ததாகவும் பின்னர் கம்பீரமான சிலைகளைக் கொண்டு இரண்டு நுழைவாயில்களை எழுப்பினார்கள். இதேபோன்று இந்த கோயிலுக்கு அருகிலேயே சமணர் மலை ஏறுவதற்கான வழியும் உள்ளது

Stories

More

மதுரையின் டாப் 3 டூரிஸ்ட் ஸ்பாட் இதோ..!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இந்த அவலநிலையா..!

12 ஜோதிர் லிங்கங்களும் ஒரே இடத்தில்..!

இந்த மலையில சமணர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாக சமண சிற்பங்களும், சிறிய சுனை பகுதியும் உள்ளதாக சான்றுகள் தெரிவிக்கின்றன

இந்த மலையில் சமீப காலத்தில் நடந்த சில பிரச்சனைகளால் தனியா மலை ஏறுவதற்கு அனுமதி இல்லை என்றும் குடும்பத்தினரும் வந்தால் மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும் என்றும் காட்டுபாடுடன் காணப்படுகிறது

இப்படி இயற்கை எழில் கொஞ்சும் சிறிய மலை அழகான கோயில், தாமரைக்குளம், மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் குடும்பங்களுடன் சேர்ந்து மகிழ்ச்சி தரும் வகையில் உள்ளது

நாணயங்களாலேயே வடிவமைக்கப்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பை.!