ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த புயலில் எச்சமாக காட்சி அளிக்கும் தேவாலயம். இயற்கை சீற்றம் மற்றும் பவளப்பாறை கற்களை பெயர்த்து எடுப்பதால் பலவீனமாகி இடிந்து விழும் நிலையில் விரைவில் அழிவை நோக்கி செல்கிறது
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் 1964-ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர புயலில் தனுஷ்கோடி நகரமே அழிவை கண்டது. புயலுக்கு பின்பு மிஞ்சிய இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் இடமாக மாறியது
புயலில் மிஞ்சிய ஒன்றுதான் பவளப்பாறை கற்களால் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட தேவாலயம் ஆகும். இந்த தேவாலயம் காலப்போக்கில் மழை மற்றும் காற்று வீசும் போது சிறிது சிறிதாக சேதமடைந்து தற்போது அழிந்துவரும் நிலையில் உள்ளது
மேலும், சிலர் இதனை “ராமர் பாலம்” அமைத்த கல் என நினைத்து எடுத்துச் செல்கின்றனர். சட்டவிரோதமாக இதனை விற்பனை செய்யும் அவலமும் அரங்கேறுகிறது
பின்பு வரும் சுற்றுலா பயணிகள் அழிந்த இடங்களுக்கென்று இருந்த அடையாளங்கள் இல்லாமல் வந்து ஏமாற்றும் நிலை ஏற்படும்.
இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் சுற்றுலா பயணிகள் நம்பி அங்கு உணவகங்கள், சிறுகடைகள் போன்றவை வைத்து நடத்தி வாழ்வாதாரம் பெற்று வரும் தனுஷ்கோடியில் வாழும் பூர்வீக மீனவமக்கள் பாதிக்கப்படுவார்கள்
இதனை தடுத்து இயற்கை சீற்றத்தால் அழிந்துவரும் தேவாலயத்தினை பராமரிப்பு பணிகள் செய்து நினைவு சின்னத்தை பாதுகாத்து சுற்றுலா சார்ந்த பல்வேறு திட்டங்களை மேம்படுத்தி தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள்
புயலால் அழிந்த இடங்களை கண்டு ஏமாற்றம் இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தினை வலியுறுத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்