உடலில் சர்க்கரை அளவு அதிகமானால் கண் பாதிப்படையும்..  எச்சரிக்கும் மருத்துவர்.!

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் இரண்டாவது வாரம் உலக கண்பார்வை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் கண் சம்பந்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளம் தனியார் கண் மருத்துவமனை முன்பு உலக பார்வை தின விழிப்புணர்வு மனித சங்கலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் முகம்மது பைசல் தலைமை வகித்தார்

இது குறித்து மருத்துவர் பைசல் கூறுகையில், "சர்க்கரை நோயாளிகள் உயர் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்காத போது உடல் உள்ளுறுப்புகள் பாதிப்பு அடையும். தொடர்ந்து கட்டுக்குள் வைக்காத போது அது ஒவ்வொரு உறுப்பிலும்பாதிப்பு ஏற்படுத்திகொண்டே வரும்

அதில் முக்கியமானது கண் பிரச்சனைகள் தான். அதே போன்று சர்க்கரை நோயின் தொடக்க அறிகுறிகளையும் கண்களில் காட்டிவிடும். எப்போதும் கண்களில் உண்டாகும் கோளாறுகளை அலட்சியப்படுத்தவே கூடாது

ஆரம்ப அறிகுறிகளின் போதே மருத்துவரை அணுக வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை அல்லது ஹைப்பர் கிளைசீமியா மனித உடலில் ஒரு நச்சு விளைவை உண்டு செய்கிறது என தெரிவித்தார்

Stories

More

இனி காலாவதியான உணவு பொருட்கள் விற்றால் இதுதான் நடவடிக்கை..

போலீசார் ட்ரஸ்ஸில் இருக்கும் கேமரா எதற்கு தெரியுமா?

உலகின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு இதுவா?

மேலும் இது கண்களை ஆழமாக பாதிக்க செய்கிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் கண்களின் பின்புறத்தில் அசாதாரண இரத்த நாளாங்களை எதிர்கொள்வார்கள். 

அவை உடையக்கூடியதாகவோ அல்லது இரத்தப்போக்குக்கு ஆளாகவோ செய்யலாம். இது கண் பார்வையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்" என தெரிவித்தார்

போலீசார் ட்ரஸ்ஸில் இருக்கும் கேமரா எதற்கு தெரியுமா.?