தமிழகத்தில் ஒரு ஐரோப்பா நகரம்.... டேனிஷ் கோட்டை ஒரு பார்வை.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 35 கி.மீ தூர தொலைவில் உள்ளது தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டை

டேனிய கோட்டை என்பது தமிழகத்தின் தரங்கப்பாடியில் வங்க கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க்காரர்களின் கோட்டையாகும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் கி.பி. 1620ம் ஆண்டு டென்மார்க் நாட்டினர் இந்தியாவில் தங்களது வர்த்தக மையத்தை அமைக்க முடிவு செய்தவுடன்,

அப்போது தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரிடம், தரங்கம்பாடியில் ஒரு துறைமுகத்தையும், டேனிஷ் பாதுகாப்பு கோட்டையையும் அமைக்க அனுமதி பெற்றனர்

கி.பி. 1622ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட்டது தான் இந்த பிரம்மாண்ட டேனிஷ் கோட்டை. இந்த டேனிஷ் கோட்டை இந்தியாவில் வர்த்தக மையத்தின் தலைமை இருப்பிடமாக அமைந்துள்ளது

400 வருடங்கள் பழைமையாகியும் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது இந்த டேனிஷ் கோட்டை

இந்தக் கோட்டையில் செயல்படும் அருங்காட்சியகத்தில், 14, 15, 16ம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரர்கள், தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், 1200 ஆண்டுகால சிலைகள், பீங்கான், மரத்தாலான பழைமையான பொருட்கள், டேனிஷ் அரசர்கள்,

ஆளுநர்களின் போட்டோக்கள், டேனிஷ்கால பத்திரங்கள், போர்க்கருவிகள், 16ம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள் என ஏராளமான வரலாற்றுச் சின்னங்களை பத்திரப்படுத்தி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

ஏசி இல்லாமலேயே வீடு குளிர்ச்சியாகும்... டேபிள் ஃபேனை இப்படி யூஸ் பண்ணிப்பாருங்க!

உலகின் சிறந்த உணவுகளின் பட்டியல்... ஆதிக்கம் செலுத்தும் இந்திய உணவுகள்...

இந்த நாட்டில் பாம்புகளே இல்லையாம்! காரணம் என்ன?

More Stories.

மேலும், இந்தக் கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டக வைப்பறை, பீர், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகளை,

அப்படியே பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இப்போதும் பராமரிக்கப்பட்டு வருவது மிகவும் சிறப்புக்குரிய ஒன்று

தரங்கம்பாடி கடற்கரையில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் காற்று அதிக அளவில் வீசுகிறது

உடல் நலத்துக்கு நன்மையளிக்கக்கூடிய  காற்றை சுவாசிப்பதற்காக இப்பகுதிக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்

next

கன்னியாகுமரியில் ஒரு நாளில் சுற்றிப்பார்க்க டாப் 5 சூப்பர் இடங்கள்.!