புதுவையில் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தனியார் அமைப்பு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்
அந்த வகையில் பாண்டிச்சேரியில் உள்ள மிகப்பெரிய அளவிலான பிரமாண்டமான பிரபல மாலில் உற்சவ் 2024 மற்றும் தனியார் அமைப்பு மூலம் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது
அதன் ஒருபகுதியாக பாரம்பரிய பறை இசையுடன் கூடிய கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம் போன்ற கிராமிய நடனங்கள் நடைபெற்றன
பிரவிடன்ஸ் மால் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அழகிய ரங்கோலி கோலமிட்டு பார்வையாளர்களின் கண்களுக்கு இனிமையாக அமைந்திருந்தது. இதில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேஷன் ஷோவில் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உடையை, மாடலிங் அழகிகள், இளைஞர்கள்அணிந்து ஒய்யார நடை நடந்தனர்
இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து லைவ்குரூப்பின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்