சங்கரன்கோவிலில் வருடத்தில் 6 நாட்கள் மட்டுமே நடக்கும் அதிசயம்.!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் ஹரியும், சிவனும் ஒன்றாக அமைந்திருப்பது இந்த கோயிலின் தனிச்சிறப்பு. சங்கரநாராயணர் கோயிலில் முன்புறத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்து கூட சிவலிங்கத்தின் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபங்களை காண முடியும்

ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதத்தில் வரும் இந்த 3 நாட்கள் மட்டுமே சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மேனியின் மீது விழும் அழகினை ரசிக்க முடியும். சில வருடங்களில் இது 4 நாட்கள் கூட நடைபெறும் என்று சொல்லப்படுகிறது

இதுபோன்று நேரடியாக சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மேல் விழுவது வெகு சில கோயில்களை மட்டுமே நடைபெறும். அதில் ஒன்றுதான் சங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் சங்கரநாராயணன் கோயில்

அதன்படி இந்த வருடமும் செப்டம்பர் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சூரிய கதிர்கள் காலை நேரடியாக சிவலிங்கத்தின் மேனி மீது விழும் நிகழ்வை காண முடியும்

வானிலை மாற்றம் காரணமாக நேற்று (செப்.21) சற்று தாமதமாக சூரியன் உதயம் ஆனாலும் சூரிய கதிர்கள் கோவிலில் இருக்கும் தூண்கள் நந்தி கொடிமரம் ஆகியவற்றில் மின்னும் அழகை பலரும் பார்த்து ரசித்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்

மேலும் சூரிய ஒளி நேரடியாக சிவலிங்கத்தின் மீது விழும் நேரத்தில் தீபாராதனை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறும். வருடா வருடம் இந்த ஆறு நாட்கள் மட்டும் சூரிய கதிர்கள் நேரடியாக சிவலிங்கத்தின் மீது விழும் இந்த அற்புதத்தை

அக்காலத்திலேயே கணித, அறிவியல் தொழில்நுட்ப திறனுடன் கோயிலை அமைத்துள்ளார் மன்னர் உக்கிர பாண்டியன். நீங்களும் ஒருமுறையாவது சூரிய கதிர்கள் சங்கரலிங்கத்தின் மீது விழும் இந்த அற்புத அழகினை ரசித்து பார்க்க இங்கு வாருங்கள்

காசி, ராமேஸ்வர யாத்திரை புண்ணியம் வேண்டுமா.? புதுக்கோட்டையில் உள்ள இந்த கோயிலுக்கு வாங்க.!