தஞ்சையில் ஓவிய சந்தை... ஒரு ஓவியத்தின் விலை இத்தனை லட்சமா.!

Scribbled Underline

ஓவியக் கலையை வளர்ப்பதற்காகவும், இளைஞர்கள் சிறுவர்கள் பொதுமக்களிடையே ஓவியக்கலையின் நுணுக்கத்தை காட்சிப்படுத்தும் விதமாகவும்,

ஓவியர்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்காகவும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சை அரண்மனை வளாகத்தில் ஓவிய சந்தை நடைபெற்றது

இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவை, சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் ஓவியர்கள் தங்களது கை வண்ணத்தில் மிகவும் நேர்த்தியாகவும் தத்ரூபமாகவும்

வரையப்பட்ட கடவுள், பாரம்பரிய கலைகள், இயற்கை காட்சிகள், விலங்குகள், வரலாற்று அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஓவியங்கள் இடம் பெற்றனர்

75 ஸ்டால்கள் அமைக்கப்பட்ட இந்த ஓவிய சந்தையில் 200 ரூபாயிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பு மிக்க ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன

மேலும் இந்நிகழ்வை பார்க்க வந்த பொதுமக்கள் ஓவியர்களிடம் தங்களது முக உருவத்தை வரைந்து கொண்டனர்

1000 கார்கள் திருட்டு.. போலி நீதிபதியாக வாழ்க்கை.. யார் இவர்?

கல்யாண புடவை ரூ.17 கோடி.. நெக்லஸ் ரூ.25கோடி.. காஸ்ட்லி திருமணம்

விமானப் பணிப்பெண்ணின் 1 மாத சேலரி எவ்வளவு தெரியுமா?

More Stories.

மேலும் மாணவர்கள், இளைஞர்கள், இல்லத்தரசிகளுக்கென ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

மேலும் களிமண் பொம்மை செய்யும் பயிற்சி, ஓவிய பயிலரங்கம், சித்திரப் பிரதிமை, சிற்ப வடிவமைப்பு, இன்னிசை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது

தஞ்சையில் முதன்முதலாக ஓவிய சந்தை நடைபெற்றதால் ஓவியக்கலை மேல்ஆர்வமுள்ள பலர் ஓவியங்களை ரசித்துப் பார்த்தும் விலைக்கு வாங்கியும் சென்றனர்