ஈரோட்டில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான அனுமன் கோவில்.!

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை அடுத்து கோவை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது இடுகம்பாளையத்தில் அமைந்திருக்கும் அனுமந்தராயசாமி கோவில்

இந்த கோயிலுக்குச் செல்லும் வழியெங்கும் இயற்கை எழில் கொஞ்சுகிறது. கோயிலை அடைந்ததுமே மனதில் பூரண அமைதி குடிகொண்டு விடுகிறது

கோயில் சுற்றுச் சுவர்களின் உட்புறத்தில் நம் வாழ்வை வளப்படுத்தும் வாழ்க்கை நெறிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன

இந்த கோவில் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில், இடர்களை களையும் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர், என்றெல்லாம் அழைக்கப்படுகிறது

ஆஞ்சநேயர் சந்நதிக்கு, தென்புறத்தில் விநாயகரும், கன்னிமூலையில் ராமலிங்கேஸ்வரரும், வடக்கில் செல்வமுத்துக்குமரனும், அவருக்கு அருகில் பர்வதவர்தனி அம்மனும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள்

ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் நீங்குவதோடு, மும்மூர்த்தியரின் அனுகிரகமும் ஒருசேரக் கிடைப்பதாகவும் ஐதீகம்

மேலும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குப் புத்திரப்பேறு கிடைக்குமென்றும் திருமணம் மற்றும் சுபகாரியங்களில் இருக்கும் தடைகள் நீங்கும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டு தினமும் ஒரு கைப்பிடி அரிசி சேர்க்க வேண்டும்

இப்படி முப்பது நாள்கள் சேர்த்த அரிசியைக் கோயிலில் கொண்டு வந்து ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டு சமர்ப்பிக்க வேண்டும்

அப்படி காணிக்கையாக வரும் அரிசியைக்கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. இந்த கோவிலின் சந்நதி திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆகும்