ராமேஸ்வரத்தில் உள்ள பேய்கரும்பில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அக்டோபர் 15- 1931ம் ஆண்டு பிறந்தார்.
இவர் மாணவர்கள், இளைஞர்களின் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அவரின் எளிமையால், ஏழை, எளிய மக்களின் ஜனாதிபதி என்று அழைக்கப்பட்டார்.
விஞ்ஞானியாக உயர்ந்த அவரின் திறமையால் அக்னி நாயகனாக அவரின் திறமையை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 27ம் தேதி 2015ம் தேதி அன்று உயிர் துறந்தார். அவரது உடல் சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்கரும்பு பகுதியில் இந்திய அரசால் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மத்திய அரசின் பாதுகாப்பு, மத்திய மேம்பாட்டு துறையின் சார்பில் மணிமண்டபமானது கட்டப்பட்டு ஜுலை 27ம் தேதி 2017ம் ஆண்டு திறக்கப்பட்டது.
ஆண்டுதோறும் அப்துல்கலாம் பிறந்தநாள், நினைவுகள், குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் நினைவகமானது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று (26.07.2023) வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலி ஜொலிக்க வைக்கப்பட்டுள்ளது.
இதனை ராமேஸ்வரம் வருகை தந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் தங்களது செல்ஃபோன்களில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்