புதிய லுக்கில் நடிகர் அஜித்குமார்...

இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்.!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இவருக்கு உண்டு

கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார் அஜித்

நிதி சிக்கல் காரணமாக சில நாட்களுக்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜித் தற்போது Good Bad Ugly படத்தில் நடித்து வருகிறார்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் 'Good Bad Ugly' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டர் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது

'Good Bad Ugly' திரைப்படம் 2025 ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

'விடாமுயற்சி', 'Good Bad Ugly' என இரண்டு படங்களில் அஜித் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

இந்நிலையில், கட்டம் போட்ட சட்டையில், சிரித்த முகத்துடன் காணப்படும் அஜித்குமாரின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன

அவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகளவில் சோசியல் மீடியாவில் தற்போது பகிர்ந்து வருகின்றனர்

next

‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை யார் தெரியுமா.?