ஒரே வீட்ல 4 ஹீரோயின்ஸ்... தமிழ் சினிமாவை தன்வசம் வைத்திருந்த குடும்பம்.!

குமாரி ருக்மணி முப்பதுகளின் இறுதி முதல் எழுபதுகளின் இறுதிவரை தமிழ் சினிமாவில் நடித்தவர். இவரின் தாய் ஜானகியும் நடிகைதான்

ஹரிச்சந்திரா, சிந்தாமணி, பாலயோகினி, தேச முன்னேற்றம், ரிஷ்யசிருங்கர் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் ருக்மணி

பின்னர் ஏவிஎம்மின் ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துக்கு ஜோடியாக நாயகியாக அறிமுகமானார்

1946 இல் ஒய்.வி.ராவ் தயாரித்து, இயக்கி, நடித்த படத்தில் ருக்மணி அவரது ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்

திருமணத்துக்குப் பிறகும் ருக்மணி தொடர்ந்து நடித்தார். 1955 இல் வெளிவந்த முல்லைவனம் திரைப்படம்தான் அவர் நாயகியாக நடித்த கடைசிப்படம்

அதன் பிறகு 1961 இல் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் சிவாஜியின் மனைவியாக நடித்தார்

அதன்பின்னர் பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மணிவண்ணனின் அம்மாவாக சின்ன வேடத்தில் தோன்றியிருப்பார்

ருக்மணி, ஒய்.வி.ராவின் மகள்தான் பிரபல நடிகை லட்சுமி. அம்மாவைவிட சினிமாவில் பேரும் புகழும் மகளுக்கு கிடைத்தன. சவாலான வேடங்களில் நடித்தார்

அந்த வகையில் லட்சுமி அவர்கள் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை நடிகை. லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவும் நடிகை. அவர் நான்காவது தலைமுறை

அம்மா லட்சுமி, பாட்டி ருக்மணியின் அர்ப்பணிப்பு ஐஸ்வர்யாவிடம் இருந்திருந்தால் இன்னும் மேம்பட்ட நடிகையாக அறியப்பட்டிருப்பார்

next

இப்போ இவங்க பிரபல ஹீரோயின்… யார்னு தெரியுதா.?