அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா வாங்கியுள்ள சம்பளம் இத்தனை கோடியா.?

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார் தற்போது 'மார்க் ஆண்டனி' பட புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார்

முன்னதாக மகிழ் திருமேனி இயக்கி வந்த 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் நடித்து வந்தார் அஜித் குமார், லைகா நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக அந்த படம் தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது

இதன் காரணமாக அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்

இந்த படத்தில் ட்ரிப்பில் ரோலில் நடிக்கும் அஜித்துக்கு 3 லுக்குகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

ஹைதராபாத்தில் நடந்து வரும் முதற்கட்ட படப்பிடிப்பில் படத்தின் முதல் பாடல் மற்றும் சண்டை காட்சி படமாக்கப்படவுள்ளது

அது முடிந்த பின்னர் ஜூன் மாதம் 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் அஜித்குமார் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணையும் மற்றொரு பிரபல நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது

ஏற்கனவே இந்த படத்தில் நடிக்க தற்போது ட்ரெண்டிங்கில் டாப்பில் இருக்கும் நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியானது

இதை தொடர்ந்து தற்போது அஜித் குமாருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயனதாராவும் களமிறங்கியுள்ளார்

பில்லா, ஏ.க.ன், ஆரம்பம், விஸ்வாசம், போன்ற படங்களில் அஜித் குமாருடன் ஏற்கனவே ஜோடி போட்டுள்ள நயன்தாரா தற்போது ஐந்தாவது முறையாக மீண்டும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் குமாருடன் ஜோடி போடவுள்ளார்

மேலும் படத்தில் அஜித்துடன் நடிக்க நடிகை நயன்தாரா வாங்கியுள்ள சம்பளம் தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது

‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ. 10 கோடி சம்பளமாக வங்கியுள்ளாராம்

next

கிளாமரில் உச்சம் தொட்ட திவ்ய பாரதி… வைரல் போட்டோஸ்.!