லட்சக்கணக்கான ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா
தமிழ், இந்தி சினிமாவின் பிரபல டாப் நடிகையான நயன்தாரா தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்
இன்றும் அழகு குறையாமல், உடல் எடையை சிக்கென வைத்து இன்றைய இளம் நடிகைகளுக்கு டப் கொடுத்து வருகிறார்
பொதுவாகவே ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகள் என்ன விதமான உணவு பழக்க வழக்கங்க மற்றும் டயட் பாலோவ் செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்
அந்த வகையில், உடல் எடையை அப்படியே மெயின்டைன் செய்து வரும் நயன்தாரா அப்படி என்ன டயட்டில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்
தற்போது அதற்க்கான பதிலை நயன்தாராவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு டயட் மிகவும் முக்கியம் என்று கூறியுள்ள நயன்தாரா தான் பின்பற்றிவரும் டயட் குறித்து பகிர்ந்துள்ளார்
அவர் பதிவில் , ‘டயட் என்றால் பிடித்தவற்றை சாப்பிடாமல் இருப்பது தான் என்று நினைத்தேன், ஆனால் அது அப்படி இல்லை என்பது போகபோகத்தான் எனக்கு தெரிந்தது
டயட் என்பது நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் கலோரிகளை கணக்கெடுப்பதில் இல்லை
அதற்கு பதிலாக நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள சத்துக்களை கணக்கில்கொண்டு, பல வகை உணவை சாப்பிட்டாலும் சரியான அளவில் சாப்பிட வேண்டும்
வீட்டிலேயே சத்தாகவும், சுவையாகவும் சமைக்கப்படும் உணவைத்தான் சாப்பிடுகிறேன். அந்த உணவுகளை ரசித்து சாப்பிடுவதால் junk உணவுகளின் மீதான ஆர்வம் முற்றிலுமாக குறைந்துவிட்டது
நாம் அன்றாடம் உண்ணும் உணவு தான் நமது ஆரோக்கியமான வாழ்க்கையை தீர்மானிக்கிறது
உங்கள் தட்டில் நீங்கள் போடும் உணவு தான் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்று தனது டயட் குறித்து பதிவிட்டுள்ளார் நயன்தாரா
தனது குழந்தை குறித்து முதன் முறையாக மனம் திறந்த VJ பிரியங்கா…