"வேறு ஒருவருடன் மிங்கிளாக தயார்"

பிரேக்கப் குறித்து முதன் முறை ஓபனாக பேசிய ஸ்ருதிஹாசன்.!

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் நடிகை, பாடகி என பன்முகத் திறமை கொண்டவர்

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ’லக்’ என்ற ஹிந்தி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்

அதனை தொடர்ந்து தமிழில்  ஏழாம் அறிவு, சிங்கம், த்ரீ, பூஜை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்

தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் கடைசியாக 'சலார்' படத்தின் 2வது பாகத்தில் நடித்தார்

மேலும் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமான ஸ்ருதி ஹாசன் பின்னர் அந்த படத்தில் இருந்து விலகினார்

இவர் கடந்த 4 ஆண்டுகளாக சாந்தனு ஹன்சாரிகா என்பரை காதலித்து வந்த நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் சமீபத்தில் பிரேக் அப் செய்து கொண்டனர்

இதுகுறித்து பொதுவெளியிலோ அல்லது சமூகவலைத்தலத்திலோ ஸ்ருதி ஹாசன் எதுவும் கூறாமல் இருந்த நிலையில், முதன் முறையாக தற்போது தனது ப்ரேக்கப்பை அவரே உறுதி செய்துள்ளார்

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார் நடிகை ஸ்ருதி ஹாசன்

அப்போது ரசிகர் ஒருவர் ஸ்ருதி ஹாசனின் ரிலேஷன்ஷிப் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த கேள்விக்கு பதிலளிப்பது தனக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றாலும் தான் சிங்கிளாக இருப்பதாக கூறினார், வேறு ஒருவருடன் மிங்கிளாக தயாராக இருப்பதாகவும் கூறினார்

மேலும், தன்னுடைய வேலையில் மட்டும் இப்போது கவனம் செலுத்தி வருவதாகவும்,  வாழ்க்கையில் தான் சந்தோஷமாக இருப்பதாகவும் கூறினார்

இதன் மூலம் ரசிகர்கள் ஸ்ருதி ஹாசன் தனது  காதலன் சாந்தனு ஹன்சாரிகாவை பிரேக்கப் செய்துவிட்டார் என்று ஊறுதி செய்துள்ளனர்

மேலும் ஸ்ருதி ஹாசன் கூறிய இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

next

நடிகர் சூரியின் Twin தம்பியை பாத்துருக்கீங்களா.? வைரல் போட்டோ.!