Yellow Star
Yellow Star

சமந்தா குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை சோபிதா…

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை திருமணம் முடித்து பின்னர் விவாகரத்து செய்தார்

இருவரும் கடந்த சில ஆண்டுகளாக தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் பிரபல மாடல் அழகியும், இளம் நடிகையுமான சோபிதாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது

இருவரும் தொடர்ந்து டேட்டிங் செய்து வந்த நிலையில் விரைவில் இவர்கள் திருமணம் முடிப்பார்கள் என்று திரையுலகில் பேசப்பட்டது

தென்னிந்திய மொழிகள், வெப் சீரிஸ், பாலிவுட் என பல படங்களில் நடித்துள்ள சோபிதா தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றார்

பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி என்ற கேரக்டரில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை பெற்றார்

இந்த நிலையில் நாக சைதன்யாவிற்கும் சோபிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது

இந்த ஆண்டு இறுதிக்குள் இருவரின் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதற்கிடையே நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தா குறித்து சோபிதா இன்டர்வியூ ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்

அதில் சமந்தா சூப்பர் கூலான கேரக்டரைக் கொண்டவர். அவரது திரைப்படங்களைப் பார்த்தால் அவற்றை சமந்தா கையாண்ட விதம் புரியும். உண்மையாகவே அவர் கூலான நடிகை என்று தெரிவித்துள்ளார்

தற்போது அந்த நேர்காணல் வீடியோ வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது

அந்த வீடியோவில் நடிகை ராஷ்மிகா மந்தனா வசீகரமானவர் என்றும், நாக சைதன்யா மரியாதைக்குரியவர் என்றும் சோபிதா கூறியுள்ளார்

next

1000 கோடி கிளப்பில் உள்ள இந்திய நடிகர்கள்.!