பான் இந்தியா நடிகையான த்ரிஷா... எப்படி தெரியுமா.?

1999-ல் வெளியான ‘ஜோடி’ படத்தில் சிம்ரனின் தோழியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் த்ரிஷா

ஆனால் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது ‘மெளனம் பேசியதே’ மற்றும் ‘லேசா லேசா’ திரைப்படங்கள் தான்

மனசெல்லாம், எனக்கு 20 உனக்கு 18, சாமி என அடுத்தடுத்து அவர் நடித்த திரைப்படங்கள் வெற்றியடைந்தது

விஜயுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி மற்றும் அஜீத்துடன் ஜீ, மங்காத்தா, என்னை அறிந்தால் என நடித்து அவர்களிருவரின் ரசிகர்களையும் தன் விசிறி ஆக்கினார்

த்ரிஷாவின் திரைவாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது இயக்குநர் கெளதம் வாசுதேவனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’

இத்திரைப்படத்தில் ‘ஜெசி’ என்னும் கதாபாத்திரத்தில் சேலை கட்டிய தேவதையாய் ரசிகர் மனதை கொள்ளை கொண்டார் த்ரிஷா

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போலவே அமைந்தது விஜய் சேதுபதியுடன் த்ரிஷா நடித்த '96'

தற்போது அவர் கைவசம் விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக படங்கள் இருக்கின்றன

இதற்கிடையே அவர் சூர்யா வங்கலாவின் இயக்கத்தில் 'பிருந்தா' என்ற படத்தில் நடித்திருக்கிறார்

இந்தப் படமானது ஆகஸ்ட் இரண்டாம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது

மேலும் இந்தப் படமானது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது

next

கோலகலமாக நடந்து முடிந்த வரலட்சுமி திருமணம்… புகைப்படங்கள்.!