வெளிநாட்டில் நடைபெறப் போகும் நடிகை வரலட்சுமியின் திருமணம்...

எந்த நாடு தெரியுமா.?

சிம்பு நடித்த 'போடா போடி' படத்தின் மூலமாக ஹீரோயினாக வரலட்சுமி அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கதாநாயகியாக அவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை

இருப்பினும் வில்லி கேரக்டரில் வரலட்சுமி கவனம் பெற்று வந்தார். குறிப்பாக விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இவரது கேரக்டர் அதிகம் பேசப்பட்டது

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு திரைப்படங்களிலும் வரலட்சுமிக்கு வரவேற்பு காணப்படுகிறது

இந்நிலையில் வரலட்சுமிக்கும் தொழிலதிபரான நிக்கோய் சச்தேவுக்கும் இடையே மார்ச் 1ஆம் தேதி மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது

நடிகை வரலட்சுமி சரத்குமாருடைய திருமணம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக அதிகம் பகிரப்பட்டு வருகிறது

இந்த நிலையில் சமீபத்திய தகவலின்படி வரலட்சுமியின் திருமணம் தாய்லாந்தில் ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டார் மும்முரமாக கவனித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது

தாய்லாந்தில் திருமணம் நடைபெறுவதை, தொடர்ந்து சென்னையில் தாஜ் ஹோட்டல் மற்றும் லீலா பேலஸில் திருமண வரவேற்புகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் திருமண வீட்டார் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

next

புதிய லுக்கில் நடிகர் அஜித்குமார்… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்.!