தீபாவளிக்கு வீட்டிலேயே செய்யும் அதிரசம் சுவையாகவும் உடையாமலும் செய்வது எப்படி என 18 வருடமாக ஸ்வீட் கடை நடத்தும் உரிமையாளர் கலா பல்வேறு டிப்ஸ்களை வழங்கியுள்ளார்
1 kg பச்சரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை நன்கு வடித்து சுத்தமான துணியில் பரப்பி 30 நிமிடம் வரை உலர விடவும். அதனை பிறகு மிக்சியில்ஈரப்பதத்துடன் அரைத்து கொள்ளவும்
ஒரு கிலோ அரிசிக்கு முக்கா kg வெல்லம் எடுத்து அதனை நன்றாக நுனிக்கி காய்ச்சி வடிகட்டி பிறகு, அதனை மீண்டும் கெட்டியாக (கம்பிப்பாகு) காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்
அதே நேரம் பாகு வெந்துகொண்டிருக்கும் போது, ஒரு கோப்பையில் நீர்எடுத்து ஒர், இரண்டு சொட்டு பாகை விட்டுப்பார்க்கவும். பாகு கரையாமல் அப்படியே இருந்தால் அதாவது தண்ணீரில் பாகு உருட்ட அளவுக்கு வந்தால் அதுசரியான பக்குவமாகும்
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாவு சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது இட்லிக்கு மாவு பிசைந்து எடுத்துக் கொள்வது போல தண்ணியாகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் நல்ல பதத்துடன் மாவு பிசைந்து கொள்ள வேண்டும்
பிசைந்த மாவு ஒரு நாள் முழுவதும் ஊற வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு மாவு எடுத்து , மிதமான சூட்டில் கடாயில் போட்டுலேசாக சிவந்ததும் திருப்பி இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து விடவும்
அதிலிருந்து என்ன வெளியேறுமாறு ஒரு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதன் பிறகுசுட்ட அதிரசத்தை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்காமல் தனித்தனியாக வைக்கவும். ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும். சுவையான வெல்ல அதிரசம் தயார்
தயார் செய்த அதிரசம் பத்து நாள் முழுவதும் கெடாமல் அப்படியே சுவையாக இருக்கும். செய்த உடனே அதிரசம் சாப்பிடுவதை விட அடுத்த நாள் சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும் எனவும், நிச்சயமாக அதிரசத்தை இப்படி செய்தால் அதிரசம் உடையாமலும்,கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும் என கலா தெரிவித்தார்