நெல்லை மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அணைகளில் நீர்மட்டம் அதிகரித்தது
இதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரானது வெள்ளமாக கரைபுரண்டு ஓடியது. இந்த மழை வெள்ளத்தில் குறுக்குத்துறை சுப்ரமணியர் கோயில் மூழ்கியது
இருப்பினும் முன்னதாக எச்சரிக்கை விடப்பட்டதன் காரணமாக குறுக்குத்துறை சுப்ரமணியர் கோவிலில் உள்ள உற்சவர் சுவாமி, அம்பாள் சிலைகள் மேல கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு வைத்து தினமும் வழிபாடு நடத்தப்பட்டு வந்தன
இதனிடையே தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை ஏற்பட்டது. கோயிலில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட கழிவுகள், மண்மேடுகளை அகற்றிக் கோயிலை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது
அத்துடன் கோயிலுக்குள் பக்தர்கள் தங்கு தடையின்றி வரும் வகையில் சாலை வசதியும் புதிதாக ஏற்படுத்தப்பட்டது
இந்நிலையில் மேல கோயிலில் இருந்து சுப்ரமணியர் உள்ளிட்ட உற்சவ சிலைகள் குறுக்குத்துறை கோயிலுக்குஎடுத்து வரப்பட்டது
எனவே குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோயிலில் 46 நாட்களுக்குப் பிறகு இன்று முதல்வழிபாடு நடத்தப்படுகிறது