கோவையில் விநாயகர் சிலைகளுக்கான சிறப்பு கண்காட்சி.!

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் காரையார் அணைக்கு மேலே பாணதீர்த்தம் அருவி உள்ளது. பாணதீர்த்தம் அருவியை பார்வையிட 9 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது

இந்த அருவிக்கு செல்வதற்கு கோடை காலமே மிகவும் உகந்தது. இந்த அருவிக்கு காரையார் அணை வழியாக படகு சவாரி மூலமாக சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் அனுமதிக்கப்பட்டனர்

ஆனால் பாதுகாப்பு உள்பட பல்வேறு காரணங்களால் சுற்றுலா பயணிகள் பாணத்தீர்த்த அருவிக்கு செல்ல சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் திடீரென தடை விதிக்கப்பட்டது

எனவே மீண்டும் பாணத்தீர்த்த அருவிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அருவியை காண மட்டும் வனத்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது

பாணதீர்த்தம் அருவியை சுற்றுலா பயணிகள் காண்பதற்கு ஏதுவாக 10 இருக்கைகள் கொண்ட காரில் நபர் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் நுழைவு சீட்டு முண்டந்துறை வனச்சரகத்தில் பெற்றுக் கொண்டு, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிடுவதற்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

படகில் சென்று பார்ப்பதற்கு அனுமதி இல்லை . அதேசமயம் அருவிக்கு அருகில் செல்லவோ அருவியில் குளிக்கவோ தொடர்ந்து தடை நீடிக்கிறது

பிரம்மிக்க வைக்கும் மேட்டூர் அணையின் வரலாறு.!