தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள காவேரி மகாலில் தனியார் நிறுவனம் சார்பில் விவசாய கண்காட்சி நடைபெற்றது
இந்த கண்காட்சியில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள், நாற்றுகள், உழவுக் கருவிகள், உழவு எந்திரங்கள், நடவுக்கருவிகள், நடவு எந்திரங்கள், மருந்து தெளிப்பான்கள், அறுவடைக்கருவிகள்,
அறுவடை எந்திரங்கள், சொட்டுநீர்ப்பாசனக்கருவிகள், வேலி வகைகள், கால்நடைத் தீவனங்கள், கால்நடை வளர்ப்புக் கான நுட்பங்கள், அரசுத்திட்டங்கள், வங்கிக்கடன் திட்டங்கள்,
வேளாண் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய வீட்டுப்பயன் பொருட்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டது.மேலும் தேனி வளர்ப்பு குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது
மேலும் இது குறித்து வந்திருந்த பொதுமக்கள் கூறுகையில் விவசாயத்திற்கு தேவையான புதுவிதமான பல்வேறுகருவிகள் இங்கு உள்ளது
வேலை சிரமம் காரணமாக எங்களால் பல இடங்களுக்கு சென்று விவசாய கருவிகள், பொருட்களை வாங்குவது சிரமம். ஆனால் இங்கு வந்தபோது பலவிதமான பொருட்கள் உள்ளது. இவற்றைத் தேர்வு செய்து வாங்குவது எளிமையாகவும் இருக்கிறது
அதேபோல் இங்கு உள்ள ஒவ்வொரு ஸ்டால்களிலும் அந்தந்த கருவிகள் மற்றும் பொருட்களின் பயன்பாடுகளை பொறுமையாக எடுத்துரைக்கின்றனர். முக்கியமாக தேனி வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது
தேனீ வளர்ப்பு பற்றிய யோசனை இல்லாதவர்களுக்கும் இந்த பயிற்சியின் மூலம் தேனி வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறினார்